பச்சிளம் குழந்தையை மிருகத்தனமாக தாக்கிய மருத்துவ உதவியாளர்: அதிர்ச்சி காட்சி

Report Print Basu in தெற்காசியா
680Shares
680Shares
lankasrimarket.com

இந்தியாவில் மருத்துவ உதவியாளர் ஒருவர் பிறந்து மூன்றே நாட்களேயான குழந்தையின் கால்களை உடைத்த சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகண்ட் மாநிலம் ரூர்க்கி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையிலே இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. மருத்துவமனை சிசிடிவியில் பதிவான காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளளது.

மருத்துவர்கள் குழந்தையை சோதனை செய்து பார்த்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தை புகார் அளிக்க பொலிசார் மருத்துவனை சிசிடிவி வீடியோவை ஆய்வு செய்து குற்றவாளியை கண்டறிந்துள்ளனர்.

குறித்த காட்சியில், பிறந்த மூன்று நாட்களில் சுவாச பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த குழந்தை ஒரு தனியறையில் வைத்து கண்காணிக்கப்பட்டு வந்துள்ளது.

அந்த அறையில் ஆண் ஊழியர் பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார், திடீரென குழந்தை அழுக தொங்கியதை அடுத்து ஊழியர் மிருகத்தனமாக குழந்தையின் கால்களை பிடித்து டயபர் மாற்றிவிடுகிறார்.

இதே போன்று அவர் பலமுறை குழந்தையின் கால்களை பிடித்து டயபர் மாற்றியதால் குழந்தையின் கால் உடைந்துள்ளது என சிசிடிவி காட்சி மூலம் தெரியவந்துள்ளது.

தற்போது, கைது செய்யப்பட்டுள்ள ஊழியரிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments