மாணவர்களை கற்பழித்து வீடியோ எடுத்து மிரட்டிய ஆசிரியர்: வீடியோவால் வெளியான உண்மை

Report Print Basu in தெற்காசியா
0Shares
0Shares
lankasrimarket.com

இந்தியாவில் ஆசிரியர் ஒருவர் மாணவர்களை பாலியல் பலாத்காரம் செய்து, அதை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெய்ப்பூரிலே இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. குற்றவாளி ஆசிரியர் ரமீஸை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வரும் ரமீஸ், வகுப்பில் படிக்கும் மாணவர்களை நல்ல மதிப்பெண் எடுக்க கட்டாயப்படுத்தி தன்னிடம் டியூசன் பயில வைத்துள்ளார்.

இந்நிலையில் பல மாணவர்களை பாலியல் பலாத்காரம் செய்த ரமீஸ், அதை வீடியோவாக பதிவு செய்துள்ளார். பின்னர், வீடியோவை இணையத்தில் வெளியிடுவேன் என மாணவர்களை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார்.

ரமீஸ் ஒரு மாணவனின் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட அது பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோரின் கவனத்திற்கு சென்றுள்ளது.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவனின் பெற்றோர் பொலிசில் புகார் அளித்துள்ளனர்.

பொலிசார் ரமீஸிடம் நடத்திய விசாரணையில் அவர் இதே போன்று பல மாணவர்களை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. தற்போது, ரமீஸை கைது செய்துள்ள பொலிசார் அவர் மீது பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments