6 பேரை கொடூரமாக கொன்ற புலி: பிடிபட்டது எப்படி?

Report Print Raju Raju in தெற்காசியா
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

இந்தியாவில் இதுவரை ஆறு பேரை கொடூரமாக காயப்படுத்தி கொன்ற புலி ஒருவழியாக தற்போது பிடிப்பட்டுள்ளதில் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள புலிகள் சரணாலத்திலிருந்து 4 மாதங்களுக்கு முன்னர் ஒரு புலி தப்பியது.

advertisement

அந்த பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் உலா வருவதாக செய்திகள் வந்தது.

இதை நிரூபிக்கும் வகையில், கிராம பகுதிகளில் சுற்றி திரிந்த 5 பேரை அந்த புலி கொடூரமாக அடித்து கொன்றது.

இந்த சம்பவத்துக்கு பின்னர் கிராமவாசிகள் மிகுந்த அச்சத்துடனே அங்கு வாழ்ந்தார்கள்.

மேலும், வனத்துறையும் ஒரு பக்கம் புலியை தேடும் வேட்டையை நடத்தி வந்தார்கள்.

இவர்களுடன் பொது மக்களும் ஈட்டி போன்ற ஆயுதங்களோடு புலியை தேடி வந்தார்கள்.

இந்நிலையில், நேற்று இரவு கிராமத்தின் ஒரு பகுதியில் வாட்ச்மேன் வேலை செய்யும் ஒரு நபரை அந்த புலி குதறி கொண்டிருந்தது.

சத்தத்தை கேட்டு வனத்துறை அதிகாரிகளும், மக்களும் ஆயுதங்கள் மற்றும் மயக்க ஊசியால் அந்த புலியை தாக்க புலி ஒரு வழியாக மயங்கி விழுந்தது.

புலி குதறியதால் வாட்ச்மேன் உயிரிழந்த நிலையில், புலியை வனத்துறை ஆட்கள் பிடித்து சென்றார்கள்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments