பனாமா ரகசிய ஆவணங்கள்: சிக்கினார் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்

Report Print Basu in தெற்காசியா
0Shares
0Shares
Cineulagam.com

பனாமா நாட்டின் மொசாக் பொன்சேகா சட்ட நிறுவனத்தின் சுமார் 1 கோடியே 15 லட்சம் ரகசிய ஆவணங்கள், உலக நாடுகளை சேர்ந்த தனி நபர்கள், நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்வதற்காக போலி நிறுவனம் துவங்கவும், ரகசிய வங்கி கணக்குகள் தொடங்கவும் உதவி இருப்பதை அம்பலப்படுத்தின.

அதில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும், அவரது குடும்பத்தினரும் பலன் அடைந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக அந்த நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு தீர்ப்யை வெளியிட்டுள்ளது.

அதில், நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான குற்றச்சாட்டை கூட்டு புலனாய்வு குழு விசாரிக்க வேண்டும் எனவும், புலனாய்வு குழு விசாரணைக்கு நவாஸ் ஷெரீப் அவரது இரண்டு மகன்கள் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், 60 நாட்களில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

அடுத்த ஆண்டு அங்கு பொதுத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்ப்பால் நவாஸ் ஷெரீப்புக்கு கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments