மாமனாரின் விளையாட்டு: விபரீத முடிவு எடுத்த மாமியார்

Report Print Deepthi Deepthi in தெற்காசியா
0Shares
0Shares
lankasri.com

பாகிஸ்தானில் மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனாரை அவரது மனைவியே சுட்டுக்கொலை செய்துள்ளார்.

பெஷாவர் பகுதியை சேர்ந்த குல்பர் கான், பேகம் பீபி தம்பதியினரின் மகன் பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.

புதிதாக திருமணமான இவரின் மனைவி, தனது மாமனார், மாமியாருடன் வசித்து வந்துள்ளார்.

பெற்றோருடன் தனது மனைவியை விட்டுவிட்டு அவர் கடமையாற்ற சென்றுவிட்ட நிலையில், வீட்டில் இருந்த அவரது இளம் மனைவியை தனது தந்தை குல்பர் கான் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதனை அறிந்த இராணுவ வீரர், இதுகுறித்து தனது தாயிடம் விளக்கியுள்ளார். தனது கணவரை பேகம் பீபி கண்டித்த போதிலும், குல்பர் கான் திருந்தவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணவனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு பொலிசாரிடம் சரணடைந்தார்.

குடும்ப உறவுகளையும், பந்தங்களையும் மதிக்க தெரியாததால் எனது கணவரை சுட்டுக் கொன்றேன் என பொலிசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது பேகம் பீபி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments