சர்ச்சையில் சிக்கிய டீக்கடை காந்தக் கண்ணழகன்

Report Print Basu in தெற்காசியா
0Shares
0Shares
Cineulagam.com

ஒரே புகைப்படம் மூலம் உலக பிரபலமடைந்த பாகிஸ்தான் டீக்கடை காந்தக் கண்ணழகன் அர்ஷத் கான் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் என பாகிஸ்தான் அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பாகிஸ்தான் இட்வார் பஜாரில் டீக்கடையில் வேலை செய்யும் அர்ஷத் கான் என்பவரின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலானது, இதனால் மொடலாகும் வாய்ப்பு கூட கைகூடி வந்தது.

இந்நிலையில், அர்ஷத் கான் போலி ஆவணங்கள் பயன்படுத்தி பாகிஸ்தானின் தேசிய அடையாள அட்டை பெற்றுள்ளதாக பாகிஸ்தான் தேசிய தரவுத்தளம் மற்றும் பதிவு ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது.

பாகிஸ்தான் பாஸ்போர்ட்டுக்காக விண்ணப்பித்திருந்த அர்ஷத் கானின் ஆவணங்களை ஆய்வு செய்த போது பல குளறுபடிகள் இருந்ததாம்.

எனினும், அவர் பிரபலமடைந்ததினால் அதிகாரத்தை பயன்படுத்தி பாஸ்போர்ட் பெற்றதாக பாகிஸ்தான் அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தான் ஆப்கானிஸ்தான் நாட்டவர் என்ற குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அர்ஷத் கான், தன் தந்தை பாகிஸ்தானில் பிறந்து வளர்ந்தவர் என குறிப்பிட்டுள்ளார்.

எனினும், தான் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் எந்த ஆவணத்தையும் அர்ஷத் வழங்கவில்லை என பாகிஸ்தான் ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

அதேசமயம், அர்ஷத் கானின் பெற்றோர் அகதி அடையாள அட்டையுடன் இருப்பதால் அவர்கள் ஆப்கானிஸ்தான் அகதிகள் என உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments