சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 13 பேர் உயிரிழப்பு

Report Print Raju Raju in தெற்காசியா
0Shares
0Shares
lankasrimarket.com

சீனாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 13 பேர் பலியானதுடன், நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளார்கள்.

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் தலைநகர் செங்டூவில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வடகிழக்குப் பகுதியில் உள்ளூர் நேரப்படி இரவு 9.19 மணியளவில் திடீரென பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7 ஆகப் பதிவாகியுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சுமார் பத்து விநாடிகளுக்கு நீடித்த நிலநடுக்கத்தில் 13 பேர் பலியாகியுள்ளார். நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதுடன் பலர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இடிபாடுகளில் சிக்கிய நூற்றுக்கும் மேற்பட்டோரை மீட்ட பேரிடர் மீட்புப் படையினர் அவர்களை 5 மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில், உயிரிழப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமென அஞ்சப்படுகிறது.

மேலும், உயிரிழப்பு குறித்த உறுதியான தகவல்கள் இன்னும் வெளியாகாத நிலையில் மீட்புப்பணிகள் தொடர்ந்தும் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்