ஆஸ்கர் நட்சத்திரம் சன்னி பவார்: இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

Report Print Arbin Arbin in சிறப்பு
0Shares
0Shares
lankasrimarket.com

லயன் ஆங்கில படத்தின் மூலம் ஆஸ்கர் அரங்கில் ஜொலித்த இந்திய சிறுவன் சன்னி பவாருக்கு மும்பையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 89வது ஆஸ்கார் விழாவில் லயன் ஆங்கில படத்தில் நடித்த இந்திய சிறுவன் சன்னி பவார் கலந்து கொண்டார்.

ஆஸ்கார் விழாவில் பிரபல நட்சத்திரங்களின் பாராட்டுதல்களை பெற்ற சன்னி பவார், ஒருவாரத்திற்கு பின்னர் மும்பை திரும்பியுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

மும்பையின் சேரி பகுதியான கலினாவில் வசு மற்றும் திலீப் என்பவர்களது மகன் தான் இந்த சன்னி திலீப். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த சன்னிக்கு லயன் கிங் படத்தில் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது.

குறித்த படத்திற்காக மொத்தம் 2000 சிறுவர்களை படக்குழுவினர் தெரிவு செய்தனர். அதில் லயன் கிங் படத்தில் நடிக்கும் வாய்ப்பு சன்னிக்கு மட்டுமே அமைந்தது.

சன்னியுடன் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருந்ததால் திலீப் பார்த்து வந்த வேலை பறிபோனது. ஆனால் தற்போது அது குறித்து தாம் கவலைப்படவில்லை என தெரிவித்துள்ள அவர், ஆயிரக்கணக்கிலான சிறுவர்களில் தனது மகன் தெரிவானதை விட சிறந்த தருணம் வேறு என்ன இருக்க முடியும் என வினவியுள்ளார்.

ஒற்றை அறை கொண்ட வீட்டில் குடியிருந்து வரும் திலீப் குடும்பம், முமையில் உள்ள சேரி பகுதியில் பல நூறு குடும்பங்களுடனே வாழ்ந்து வருகின்றனர்.

சன்னி மற்றும் அவரது சகோதரர்கள் திவிஷா மற்றும் ஜிக்னேஷ் ஆகியோர் அரசு பள்ளியில் கல்வி கற்று வருகின்றனர்.

ஆஸ்கார் விழா அரங்கில் எவருமே தங்களை ஏழ்மை குடும்பத்தில் பிறந்தவர்கள் என ஒதுக்கவில்லை என கூறும் சன்னி பவார், தமது குடும்பத்தினர் அமெரிக்காவில் இருந்த ஒரு வார காலம் மிகவும் மதிப்புடனே நடத்தப்பட்டனர் எனவும் சிறுவன் சன்னி பவார் தெரிவித்துள்ளார்.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments