பரிகாரம் செய்ய ஏற்ற நாள் இதுதான்

Report Print Meenakshi in ஆன்மீகம்
0Shares
0Shares
lankasrimarket.com

ஜாதகத்தில் ஏதேனும் தோஷம் அல்லது திருமணத்தடை போன்றவை இருந்தால் அதற்காக நாம் சில பரிகாரங்களை மேற்கொள்வதுண்டு. பரிகாரங்கள் செய்வதற்கென்று குறிப்பிட்ட நேரங்கள் உள்ளது.

சுபமான பரிகாரங்களை வளர்பிறையிலும், துயரம் தீர்க்கும் பரிகாரங்களை தேய்பிறையிலும் செய்யவேண்டும். பரிகாரங்களை செய்யவேண்டிய நேரங்கள், செய்யக்கூடாத நேரங்களாவன.

பரிகார காலம்

குளத்தங்கரை, கிணற்றங்கரை, நதிக்கரை, கடற்கரை, அருவிகரை, கோசாலை, சிவ ஆலயங்கள், விஷ்ணு சந்நிதி, குரு ஆலயம் ஆகிய இடங்களில் சுபகாரியங்களை செய்யலாம்.

செவ்வாய் இருக்கும் இடத்தின் அதிபதி என்ன கிழமை குறிக்கிறதோ அந்த கிழமையிலும், அவரவர் பிறந்த நட்சத்திரமன்றும், செவ்வாய் கிழமையிலும் பரிகாரம் செய்யலாம்.

பரிகாரம் செய்யகூடாத நேரம்

ஜென்ம நட்சத்திரத்துக்கு 4, 8, 12 ஆக வரும் நட்சத்திர நாட்களிலும், பரிகாரம் செய்பவரின் மனைவி நட்சத்திரத்திலிருந்து 4, 8, 12 ஆக வரும் நாட்களிலும் பரிகாரம் செய்யக்கூடாது.

மூத்த குழந்தை ஆணாக இருந்தாலும் அந்த குழந்தையின் 4,8,12 நட்சத்திரங்களில் வரும் நாட்களிலும் பரிகாரங்கள் செய்து கொள்ளக்கூடாது.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்