6 மணிக்கு மேல் கோவிலில் கல்லாக மாறும் மனிதர்கள். எங்கு தெரியுமா?

Report Print Meenakshi in ஆன்மீகம்
1292Shares
1292Shares
lankasrimarket.com

பொதுவாகவே அனைத்து கோவில்களிலும் மாலை ஆறு மணிக்கு மேல் தான் சிறப்பு பூஜை வழிபாட்டினை நடத்துவர். கோவிலுக்கு சென்றாலே ஒரு வித மன அமைதியும் நிம்மதியும் நம்மை சூழ்ந்து கொண்டது போன்ற உணர்வு ஏற்படும்.

ஆனால் இராஜஸ்தானில் உள்ள கிரடு என்னும் கோவிலில் மட்டும் மாலை 6 மணி ஆனாலே பதறி அடித்து கொண்டு ஓடுகின்றனர்.

1000 ஆண்டுகால பழமை வாய்ந்த புகழ்பெற்ற இந்த கோவிலில் மாலை ஆறு மணிக்கு மேல் இந்த கோவிலில் தங்கி இருப்பவர்கள் தூங்கிவிட்டால் அவர்கள் கல்லாக மாறிவிடுவார்கள் என அப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் அக்கோவிலுக்கு முனிவர் ஒருவர் வந்ததாகவும் அவருக்கு அந்த மக்களை பிடிக்காததால் அனைவரையும் கல்லாக மாற்றி விட்டாதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இன்னும் சிலர் அந்த முனிவர் கோவிலில் இன்னும் வசிப்பதாக கூறுகின்றனர்.

இதனால் கோவிலுக்கு புதிதாக வருபவர்களிடம் அப்பகுதியினர் இரவு நேரத்தில் இங்கு தங்க வேண்டாம் என எச்சரிக்கின்றனர்.

ஆனாலும் பல ஆண்டுகள் பழமையான இக்கோவிலுக்கு வரும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments