அட்சய திருதியையன்று செல்வம் பெருக...ஒவ்வொரு ராசிக்காரர்களும் சொல்ல வேண்டியது

Report Print Meenakshi in ஆன்மீகம்
0Shares
0Shares
lankasri.com

அட்சய திருதியை மங்கலகரமான நாள். அன்று தங்கம், வெள்ளி போன்ற பொருள்களை வாங்கினால் செல்வம் பெருகும்.

தொழில் தொடங்க நினைப்பவர்கள் அட்சயதிருதியையன்று தொடங்கினால் சிறப்பான முன்னேற்றம் காணலாம்.

ஒவ்வொருவரின் ஜாதகத்தினைப் பொருத்தும் பலன்கள் ராசியினை பொருத்தும் கிடைக்கும் நன்மைகள் மாறுபடும்.

அனைத்து ராசிக்காரர்களும் நன்மையினை பெருவதற்கு ஒவ்வொடு ராசிக்கும் தனித்தனியாக மந்திரங்களும் அவர்கள் அன்று செய்யவேண்டிய தானங்களும் உள்ளது.

மேஷம்

"ஓம் ஐங் க்ளிங் சாங்" என்னும் மந்திரத்தினை கூறுவதால் செல்வாக்கு கூடும்.

பருப்பு, கோதுமை, சிவப்பு நிறப் பூக்கள், சிவப்பு நிற ஆடைகள், செம்பு மற்றும் வெல்லப்பாகு போன்ற பொருள்களை தானம் செய்யவேண்டும்.

ரிஷபம்

ரிஷபம ராசிக்காரர்கள் "ஓம் ஐங் க்ளிங் ஸ்ரீங்" என கூறுவதால் வாழ்வில் சந்தோஷம் பெருகும்.

வெள்ளை நிறத்தில் உள்ள பசு மற்றும் கன்றுக் குட்டி, வைரம், குதிரை போன்றவை, அரிசி மற்றும் வாசனை திரவியங்கள் போன்ற பொருள்களை இவர்கள் தானம் செய்யவேண்டும்.

மிதுனம்

"ஓம் க்ளிங் ஐங் சாங்" எனும் மந்திரத்தினை கூறி பச்சை நிறத்தில் உள்ள பருப்பு, மரகதக் கற்கள், தங்கள் மற்றும் சிப்பி போன்றவற்றினை தானமாக கொடுப்பதால் வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் பெருகும்.

கடகம்

"ஓம் ஐங் க்ளிங் ஸ்ரீய்ங்" என்னும் மந்திரத்தினை கூறுவதால் செல்வம் பெருகும். பணப்பிரச்சனை உள்ளவர்களுக்கு பணப்பிரச்சனை தீரும்.

நெய், சர்க்கரை, பால், தயிர், வெள்ளி, வாசனை திரவியங்கள், வெள்ளை நிற ஆடைகள், அரிசி, முத்துக்கள் மற்றும் மூங்கில் கூடைகள் போன்ற பொருள்களை இவர்கள் தானம் செய்யவேண்டும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் "ஓம் ஹ்ரிங் ஸ்ரீய்ங் ஸ்ராங்" என்னும் மந்திரத்தினை கூறி பசு, சிவப்பு நிற பூக்கள், சிவப்பு நிற ஆடைகள், செம்பு, வெல்லப்பாகு, தங்கம் மற்றும் கோதுமை போன்ற பொருள்களை தானமாக வழங்குவதால் வெற்றி கிடைக்கும்.

கன்னி

"ஓம் ஸ்ரீங் ஐங் ஸ்ராங்" என்னும் மந்திரத்தினை கன்னி ராசிக்காரர்கள் கூறுவது மிகவும் நல்லது. இவர்கள் பச்சை நிற வளையல்கள், ஆடைகள் மற்றும் பெருஞ்சீரகம் போன்றவற்றினை தானமாக வழங்க வேண்டும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் "ஓம் ஸ்ரீங் ஐங் ஷாங்" என்னும் மந்திரத்தினை கூறி வெள்ளை நிற ஆடைகள், சந்தனப் பவுடர், வாசனைத் திரவியம் மற்றும சர்க்கரை போன்றவற்றை தானமாக கொடுத்தால் நல்லது.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் குடும்பத்தில் செல்வம், மகிழ்ச்சி பெருக "ஓம் ஐங் க்ளிங் ஸ்ரீய்ங்" என்னும் மந்திரத்தினை கூறி சந்தனப் பவுடர், பவளம் மற்றும் குங்குமப்பூ ஆகியவற்றை தானமாக வழங்க வேண்டும்.

தனுசு

"ஓம் ஹ்ரீங் க்ளிங் ஷாங்" என்னும் மந்திரத்தை கூறி மஞ்சள் நிற தானியங்கள், மஞ்சள் நிற ஆடைகள், புஷ்ப ராகம் போன்றவற்றினை தானமாக கொடுத்தால் வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் "ஓம் ஹ்ரீங் க்ளீங் ஷாங்" என்னும் மந்திரத்தினை கூறி காலணிகள், எள், எண்ணெய், பருப்பு வகைகள் மற்றும் பசு ஆகியவற்றை தானமாக வழங்க வேண்டும்.

கும்பம்

"ஓம் ஹ்ரீங் க்ளிங் ஸ்ரீய்ங்" என்னும் மந்திரத்தினை கூறுவதால் லட்சுமியின் நல் ஆசியினை பெறலாம். வெள்ளி, இரும்பு, நீல மாணிக்கம், கருப்பு நிற ஆடைகள், போர்வைகள் மற்றும் குடைகள் போன்றவைகளை தானமாக வழங்க வேண்டும்.

மீனம்

மீனம் ராசிக்காரர்கள் "ஓம் ஹ்ரீங் க்ளிங் ஷாங்" என்னும் மந்திரத்தினை கூறி தங்கம், மஞ்சள், குங்குமப்பூ, சர்க்கரை, வெள்ளி, உப்பு, தேன் மற்றும் குதிரை ஆகியவைகளை தானம் செய்வதுலட்சுமி தேவியின் முழு ஆசியை பெற்றுத் தரும்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments