இன்று சந்திரகிரகணம்: பரிகாரம் இதுதான்

Report Print Fathima Fathima in ஆன்மீகம்
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

சூரியன், சந்திரன், பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் நிகழ்வான ஆடிப் பௌர்னமியான இன்று சந்திரகிரகணமாகும்.

நிலவின் மீது படவேண்டிய சூரிய ஒளிக்கதிர்கள் பூமியை மறைத்துக் கொள்ளும் போது சந்திரகிரகணமானது நிகழ்கின்றது.

பஞ்சாகத்தில் இடம்பெற்றுள்ள மகர ராசியில் திருவேண நட்சத்திரத்தில் இரண்டாம் பாதத்தில் கேது கிரகத்தில் இரவு 10.51-12.39 மணி வரையில்(இந்திய நேரப்படி) சந்திரகிரகணம் உண்டாகிறது.

ரோகினி, அஸ்தம், உத்தராட்ம், அவிட்டம் நட்சத்திரத்தில் திங்கட்கிழமையில் பிறந்தவர் கோயில் வழிப்பாடு செய்து உளுந்து தானம் செய்வது நன்மையளிக்கும்.

கர்ப்பிணி பெண்கள் இரவு 9.00-3.00 மணி வரையில் நிலாவை பார்ப்பது கூடாது. அதன் பிறகு அதிகாலையில் நீராடி விட்டு சந்திர தரிசனம் செய்யலாம்.

சந்திர கிரகணம் அன்று செய்யக் கூடாதவை?
  • சந்திர கிரகணம் தொடங்குவதற்கும் 2 மணி நேரத்திற்கு முன் எவ்வித உணவுகளையும் சாப்பிடக் கூடாது.
  • சந்திர கிரகணத்தின் போது, கர்ப்பிணி பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது.
  • கிரகண நேரத்தில் ஆலயங்கள் அனைத்தும் மூடி இருக்க வேண்டும். அந்த நேரத்தில் தரிசனங்கள் செய்யக் கூடாது.
  • சமைத்து வைத்திருக்கும் உணவுகளில் தர்ப்பை புல்லினை போட்டு வைக்க வேண்டும்.
  • கிரகணத்தின் போது நவக்கிரக துதி மற்றும் சந்திர கிரகணத்திற்கான துதிகளை பாராயணம் செய்யலாம்.
  • கிரகணம் முழுவதும் முடிந்த பின் ஸ்நானம் செய்து விட்டு ஆலய தரிசனம் மேற்கொள்ள வேண்டும்.
  • ஆலய தரிசனம் செய்து விட்டு தீபம் ஏற்றி வழிபட்டால், கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
  • கிரகணம் முடிந்ததும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது நல்லது. ஆலய தரிசனம் மேற்கொண்ட பின்பே உணவு சாப்பிட வேண்டும்.
  • சந்திரக் கிரகண காலத்தில் வீட்டில் இருந்தவாறு இறைவனை துதித்து இறை பாடல்களை பாராயணம் செய்வது நல்ல பலனைக் கொடுக்கும்.
  • சந்திரக் கிரகணம் முடிந்ததும் ஆலய வழிபாடு செய்தால், அதிக சிறப்பு பலன்களை பெறலாம்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்