சனிதோஷத்திற்கான விரதம்: எப்படி இருந்தால் பலன் கிடைக்கும்?

Report Print Printha in ஆன்மீகம்
0Shares
0Shares
lankasrimarket.com

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்ரன், சனி, ராகு, கேது போன்ற நவகிரகங்களில் நாம் அனைவரும் பார்த்து அஞ்சுவது சனீஸ்வர பகவான்.

சனிதோஷம் உள்ளவர்கள் தோஷத்தின் தாக்கத்தை குறைக்க சனி பகவானுக்கு எப்படி விரதம் இருக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.

சனீஸ்வரருக்கு விரதம் இருப்பது எப்படி?
  • சனிக்கிழமைகளில் பூரண உபவாசம் இருந்து காகம் மற்றும் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்க வேண்டும்.
  • சனிக்கிழமை அன்று ஒரு வேளை உணவுடன் விரதம் இருந்து சனிபகவான் ஸ்தோத்திரங்களை சொல்லி வழிபட வேண்டும்.

  • எள்ளை சுத்தம் செய்து வறுத்து அதில் வெல்லம், ஏலக்காய் பொடி சேர்த்து இடித்து திலசூரணம் செய்து வெங்கடேச பெருமாள் மற்றும் சனீஸ்வரருக்கு வைத்து வணங்க வேண்டும்.

  • சிறிது எள்ளை பொட்டலம் கட்டி தினமும் இரவு படுக்கும் போது தலைக்கு அடியில் வைத்து கொண்டு படுத்து, காலையில் அதை அன்னத்தில் கலந்து காகத்திற்கு 9, 48 அல்லது 108 நாட்கள் வைக்க வேண்டும்.

  • சனிக் கிழமை அன்று சனீஸ்வரர் கோவிலுக்கு சென்று ஒரு தேங்காயை இரண்டாக வெட்டி, அதில் நல்லெண்ணெய் விட்டு எள் முடிச்சிட்டு தீபமாக ஏற்ற வேண்டும்.

  • சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து கருப்பு அல்லது நீல வஸ்திரம் சாத்தி, எள் சாதம், வடைமாலை செய்து வழிபட்டு, அந்த வழிபட்ட பூஜை பொருட்களை அர்ச்சகர், அந்தணர், ஏழைகள் ஆகியோர்களுக்கு கொடுக்க வேண்டும்.

  • சனி பகவானுக்கு நவக்கிரக சாந்தி ஹோமங்கள், அபிஷேக, ஆராதனைகள் மற்றும் மண்டல பூஜைகள் செய்யலாம்.

  • சனிதோஷம் உள்ளவர்களின் பிறந்த ஜன்ம நட்சத்திரம் அன்று அல்லது சனீஸ்வரர் பிறந்த நட்சத்திரமான ரோகிணி அன்று ஒவ்வொரு மாதமும் அல்லது ஒவ்வொரு சனிக் கிழமை அன்றும் அர்ச்சனைகள் செய்ய வேண்டும்.

  • ஆஞ்சநேயர், தர்மராஜன், பிரஜாபதி முதலிய தேவதைகளையும் ஆராதனை செய்து வரலாம்.

  • தினமும் நவக்கிரகம் மற்றும் சனிபகவான் ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்து வரலாம்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்