உங்க வீட்டில் அஷ்ட ஐஸ்வரியம் அதிகரிக்க வேண்டுமா? இதை தினமும் சொல்லுங்கள்

Report Print Printha in ஆன்மீகம்
0Shares
0Shares
Cineulagam.com

நம் வீட்டில் லஷ்மி தேவியை நிரந்தரமாக வாசம் செய்வதற்கு மஹாலஷ்மி ஸ்லோகத்தை தினமும் கூறி வணங்கி வர வேண்டும்.

மஹாலஷ்மி ஸ்லோகம்

“ஸ்ஹஸ்ரதள பத்மஸ்த கர்ணிகா வாஸினீம் பராம்

சரத்பார்வண கோடீந்து ப்ரபாமுஷ்டிகராம் பராம்

ஸ்வதேஜஸா ப்ரஜ்வலந்தீம் ஸூகத்ருச்யாம் மனோஹராம்

ப்ரதப்த காஞ்சனநிப சோபாம் மூர்திமதீம் ஸதீம்

ரத்நபூஷண பூஷாட்யாம் சோபிதாம் பீதவாஸஸா

ஈஷத்தாஸ்ய ப்ரஸன்னாஸ்யாம் சஸ்வத்ஸூஸ்திரயௌவனாம்

ஸர்வஸம்பத்ப்ரதாத்ரீம் ச மஹாலஷ்மீம் பஜே சுபாம்”

இதற்கு, ஆயிரம் தளங்களுடன் கூடிய தாமரை மலரின் நடுவில் வசிப்பவளும் சிறந்தவளும் சரத் காலத்தில் உள்ள கோடி சந்திரனுக்கு ஒப்பானவளும், தனது ஒளியால் பிரகாசிக்கின்றவளும், ஆனந்தமயமாகக் காட்சி தருபவளும், பக்தர்களின் மனத்தைக் கவர்பவளும், உருக்கி வார்த்த தங்கத்தின் பிரகாசமே உருவெடுத்து வந்தது போன்று இருப்பவளும்,

பதிவிரதையும் ரத்னாபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவளும் தங்கப் பட்டாடையால் விளங்குகின்றவளும், மந்தஹாஸத்தால் பிரசன்ன முகமுடையவளும், சாஸ்வதமாய் அமைந்துள்ள யௌவனத்தை உடையவளும், பக்தர்களுக்கு சர்வ சம்பத்துக்களையும் தருபவளும்,

மங்கலத்தை அருள்கின்றவளுமான ஸ்ரீ மகாலட்சுமியை பூஜிக்கிறேன் என்பது பொருளாகும்.

ஸ்ரீதேவி பாகவதம் 9-ஆவது ஸ்கந்தம் 42-ஆவது அத்தியாயத்தில் உள்ள மகாலட்சுமியின் இந்த தியான ஸ்தோத்திரத்தை சொல்லி வீட்டில் வழிபட்டால் அஷ்ட ஐஸ்வர்யங்கள் பெருகும்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்