வெட்டப்பட்ட விநாயகரின் மனிதத்தலை! யுகங்களாக தொடரும் நம்பிக்கை

Report Print Kavitha in ஆன்மீகம்
0Shares
0Shares
lankasri.com

இவ்வுலகில் நிலத்தடியிலும் பல ஆன்மிக அதிசயங்கள் உண்டு. அவற்றில் ஒன்றுதான் பாதாள புவனேஸ்வர் குகைக்கோயில்.

இது அற்புதமான மர்மங்கள் நிறைந்த ஆன்மிகத் தலங்களில் இதுவும் ஒன்றாகும்.

விநாயகரின் மனிதத்தலை வெட்டப்பட்டு பிறகு பார்வதியின் கோரிக்கையின் பேரில் யானைத் தலையை எடுத்துவரச் செய்து, எட்டு இதழ் கொண்ட தாமரை மூலம் தண்ணீர் தெளிக்கச் செய்து உயிர்பெறச் செய்தார் என்றும் நாம் புராணங்கள் மூலம் அறியலாம்.

அப்படி வெட்டப்பட்ட விநாயகரின் தலை இன்றும் ஒரு குகையில் அப்படியே இருப்பதாக கூறப்படுகிறது.

உத்தரகான்டிலுள்ள புவனேஸ்வர் கிராமத்தில் அமைந்துள்ளது பாட்டல் புவனேஸ்வர் குகைக் கோயில். இந்த கோயில் விநாயகப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

இந்த குகை 160 அடி நீளமும் 100 அடி ஆழமும் கொண்ட சுண்ணாம்புக்கல் குகை.

சிவனின் அனுகிரகம் இருந்தால் மட்டுமே அந்த குகையை முழுமையாக சென்றடைய முடியும் என்று பக்தர்கள் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த மர்ம குகையை பாதள குகை என்று சிலர் கூறுகின்றார்கள்.

இந்த குகையில் இருந்து பிரியும் ஒரு கிளை குகை கைலாயத்தை சென்றடைவதாகவும் கூறப்படுகிறது.

திரேதாயுகத்தில் ரிதுபர்னன் என்ற மன்னன்தான் முதல்முதலில் இங்கே நுழைந்தான் என்று ஒரு புராணக்கதை உள்ளது.

அதன் பின் பாண்டவர்கள் இங்கு வந்து ஈஸ்வரனை வணங்கி பின் வானுலகம் சென்றார்களாம். இந்தக் கலியுகத்தில் ஆதிசங்கரர் இங்கு வந்து பூஜை செய்து லிங்கத்திற்குச் செப்பிலான காப்பு வைத்து விட்டுச் சென்றிருக்கிறார்.

பண்டாரிகள் எனப்படும் குருமார்கள்தான் இங்கே இன்றுவரை பூஜை செய்கிறார்கள்.

இந்தக் மர்மக்குகையில் நான்கு கதவுகள் உண்டு என்கிறார்கள். ஆனால் அவற்றில் இரண்டு கதவுகள் போன யுகத்திலேயே மூடப்பட்டுவிட்டது என்று ஸ்கந்த புராணத்தில் குறிப்பு கூறப்பட்டுள்ளது.

இக்குகையில் இன்னோரு ஆச்சரியம் என்வொன்றால் சுமார் 80 படிகள் இறங்கினால்தான் நிலத்தடிச் சுரங்கங்களை காணலாம் என்றும் இங்கு பல நூற்றாண்டுகளாக இங்கே வழிந்தோடும் நீர்க் கனிமங்கள் கலந்து படிகங்களாக மாறி அவை கற்களைப் பல்வேறு உருவங்களாக சிற்பிற்கள் வெட்டியிருக்கின்றனர் எனவும் கூறப்படுகின்றது.

இதை தொடர்ந்து இக்குகையின் படிகளின் நடுவே செல்கின்ற போது நரசிம்மரின் உருவமும் கீழே இறங்கியவுடன் ஆதிசேஷன் தலையில் பூமியைத் தாங்கியபடி இருக்கும் காட்சியும் ஒரு யாக குண்டம் மற்றும் தக்ஷகன் பாம்பு உருவமும் இந்த மர்ம குகையில் காணப்படுகின்றது

இங்குதான் அர்ஜுனனின் கொள்ளுப் பேரன் ஜனமேஜயன் தன் தந்தை பரீட்சித்தின் மரணத்திற்குப் பழி வாங்குவதற்காக நாக யாகம் செய்தான் என்று சொல்லப்படுகிறது.

இந்த குகை வழியாக செல்லும்போது ஆதிசேஷனின் முதுகின் மேல்தான் நடக்க ஆரம்பித்து பத்ரிநாத், கேதார்நாத், அமர்நாத் விக்ரகங்கள் லிங்கங்களின் வடிவிலும் பக்கத்தில் கால பைரவர் பயங்கரமான உக்கிரத்துடன் காட்சி தருகின்றார் மற்றும் அதன் வாயின் முன் பாதாள சண்டியுடன் சிம்மத்தின் மேல் மண்டை ஓடுகளுடன் காட்சி தருகிறார் சிவபெருமான்.

இந்த வழியாக உள்ளே செல்ல முடியுமானால் மோட்சத்தை அடைய முடியும் என்று பலரும் கூறுகின்றார்கள்.

இதை தொடர்ந்து நுழைவது கருவறை. செப்புக் கவசங்கள் பொருத்தப்பட்ட மூன்று இயற்கை சக்திகளைக் குறிக்கும் மூன்று சிறிய லிங்கங்கள் இவைகளை இங்கே பொருத்தியவர் ஆதிசங்கரர் என்று கூறப்படுகின்றது.

அடுத்தது கழுத்தில் நாகங்களுடனும், ஜடாமுடியுடனும் சிவன் தோற்றம் தருகிறார்.

இந்த மர்மகுகையிலிருந்து திரும்புகிற வழி அல்லாமல் வேறு வழி ஒன்று காணப்படுகின்றது. அந்தப் வழியில் தான் நான்கு யுகங்களை குறிக்கும் சிவலிங்கங்கள் உள்ளது என்றும் கலியுகத்தைக் குறிக்கும் லிங்கம் எப்போது மேலிருந்து வரும் கூம்பைத் தொடுகிறதோ அதுவே கலியுகம் முடியும் தருணமாம் என்று சொல்லப்படுகின்றது.

இந்த மர்மகுகையில் சிவபெருமானுடன் இங்கு முப்பது முக்கோடி தேவர்களும் குடிகொண்டுள்ளார்கள் என்பது ஐதீகம்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்