சனி பகவான் எந்த இடத்தில் இருந்தால் அதிர்ஷ்டம்?

Report Print Printha in ஆன்மீகம்
0Shares
0Shares
lankasrimarket.com

ஒருவரின் கர்ம வினைப்படி, பூர்வ புண்ணிய பலனிற்கேற்ப நன்மை, தீமைகளை வழங்குவதில் சனி பகவானுக்கு நிகர் யாருமில்லை.

ஜென்ம ராசியில் அதாவது ஒன்றாம் ராசியில் சஞ்சரிப்பதை ஜென்ம சனி என்றும், இரண்டாம் வீட்டில் சஞ்சரிகும் போது பாத சனி என்றும் ஏழரை ஆண்டு சனி காலம் உள்ளது.

எந்த இடத்தில் சனி பகவான் இருந்தால் அதிர்ஷ்டம்?

  • சனி பகவான் 1-ம் வீட்டில் சஞ்சரிக்கும் காலத்தை ஜென்ம சனி என்பர். இந்த காலகட்டத்தில் வீண் பிரச்சனைகள் மற்றும் உடல் உபாதைகள் உண்டாகும்.

  • சனி 2-ம் வீட்டில் இருந்தால் குடும்பத்தில் பிரச்சனைகள், வீண் வாக்குவாதம், சொத்தில் நஷ்டம், பொருளாதார நெருக்கடிகள் உண்டாகும்.

  • சனி பகவான் 3-ம் வீட்டில் இருந்தால் எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றி, தைரியம் மற்றும் தாராளமான பண வரவுகள் உண்டாகும்.

  • சனி 4-ம் வீட்டில் சஞ்சரிப்பதை அர்த்தாஷ்டம சனி என்றும், 7-ல் சஞ்சரிப்பதை கண்டக சனி என்பார்கள். இக்காலகட்டத்தில் கல்வியில் இடையூறு, தாய்க்கு தோஷம், அசையா சொத்து அமைய இடையூறுகள் ஆகியவை உண்டாகும்.

  • சனி பகவான் 5-ம் வீட்டில் இருந்தால் புத்திர தோஷம், பூர்வீக தோஷம் மற்றும் உறவினர்களிடம் கருத்து வேறுபாடு ஆகிய பிரச்சனைகள் உண்டாகும்.

  • சனிபகவான் 6-ம் வீட்டில் இருந்தால் எதிரிகளை பந்தாடும் பலம், வலிமையான வாழ்க்கை மற்றும் எதிர்பாராத பண வரவுகள், துணிவுடன் வாழும் அமைப்புகள் ஆகியவை உண்டாகும்.

  • சனி 7-ம் வீட்டில் இருந்தால் திருமண தாமதம், நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடு மற்றும் நண்பர்களினால் நஷ்டம் ஆகியவை உண்டாகும்.

  • சனி 8-ம் வீட்டில் சஞ்சரித்தால் நீண்ட ஆயுள் உண்டாகும். ஆனால் பொருளாதார கஷ்டம், ஏழை குடும்பத்தில் திருமணம், கண்களில் பாதிப்பு ஆகிய பிரச்சனைகள் ஏற்படும்.

  • சனிபகவான் 9-ம் வீட்டில் சஞ்சரித்தால் பொதுப்பணியில் ஈடுபடும் அமைப்பு, தந்தை மற்றும் பூர்வீக வழியில் அனுகூலமற்ற அமைப்பு, பூர்வீக சொத்து இழப்பு ஆகிய பிரச்சனை உண்டாகும்.

  • சனி 10-ம் இடத்தில் இருந்தால் எதிர் நீச்சல் போட்டு முன்னேறும் அமைப்பு, அடிமைத் தொழில், மற்றவர்களை வழி நடத்தும் வலிமை உண்டாகும்.

  • சனி பகவான் 11-ம் இடத்தில் சஞ்சரித்தால் நோயற்ற வாழ்வு, எதிர்பாராத லாபங்கள், அசையா சொத்து சேர்க்கை, மூத்த சகோதர தோஷம் ஆகியவை உண்டாகும்.

  • சனி 12-ம் இடத்தில் அமையப் பெற்றால், கண்களில் பாதிப்பு, எதிரிகளால் தொல்லை, வீண் விரயங்கள் ஏற்படும்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்