அஷ்டம சனியில் இருந்து விடுபட: இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

Report Print Printha in ஆன்மீகம்
0Shares
0Shares
lankasrimarket.com

ஒருவரின் கர்ம வினைப்படி, அவர்களின் பூர்வ புண்ணிய பலத்திற்கேற்ப நன்மை, தீமைகளை சனி பகவான் அளிப்பார். அந்த வகையில் அஷ்டம சனியின் பாதிப்பில் இருந்து விடுபட சில பரிகாரங்கள் இதோ,

அஷ்டம சனியின் பாதிப்பில் இருந்து விடுபடும் பரிகாரங்கள்
  • பிரதோஷ காலத்தில் சிவபெருமானுக்கு வில்வ இலை வைத்து வணங்க வேண்டும்.
  • தினமும் காலையில் குளித்து விட்டு எள் கலந்த உணவை காகத்திற்கு வைக்க வேண்டும்.
  • வாரந்தோறும் சனிக் கிழமை அன்று சனி பகவானுக்கு இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
  • சனி பகவானுக்கு கருங்குவளை மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
  • சனிக் கிழமைகளில் வன்னி மர இலைகளை மாலையாக தொடுத்து சிவபெருமானுக்கு சாற்றி வணங்க வேண்டும்.
  • சனிக் கிழமையில் நல்லெண்ணெய் குளியலை மேற்கொண்டு, அசைவ உணவுகளை சாப்பிடக் கூடாது.
  • ஞாயிற்று கிழமை மாலை ராகுகால வேளையிலும், தேய்பிறை அஷ்டமி நாட்களிலும் கால பைரவரை வணங்கி வர வேண்டும்.
  • சித்தர்களின் பீடங்கள், ஜீவ சமாதி பீடங்களுக்கு சென்று வணங்கி வழிபடலாம்.
  • வன்னி மரத்தை சுற்றி வந்து வணங்கி ராம நாமத்தை ஜபித்து வந்தால் சனிபகவானின் தொல்லையில் இருந்து தப்பிக்கலாம்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்