சந்திர கிரகணத்தின் போது இதையெல்லாம் செய்ய வேண்டாம்!

Report Print Fathima Fathima in ஆன்மீகம்
0Shares
0Shares
lankasri.com

சூரியன், பூமி, சந்திரன் இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது கிரகணம் ஏற்படுகிறது, இதில் சந்திரன் மறைக்கப்படும் போது சந்திரகிரகணமும், சூரியன் மறைக்கப்படும் போது சூரியகிரகணமும் நிகழ்கிறது.

நாளை 31/01/2018 அன்று சந்திரகிரகணம் ஏற்படவுள்ள நிலையில் எதை செய்ய வேண்டும், செய்யக்கூடாது என இங்கு கூறப்பட்டுள்ளது.

  • கிரகணம் தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே எந்தவித உணவும் உட்கொள்ளக் கூடாது.
  • கர்ப்பிணி பெண்கள் வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது.
  • ஆலயங்கள் அனைத்தும் மூடி இருக்க வேண்டும். கிரகண நேரத்தில் ஆலய தரிசனம் கூடாது.
  • செய்து வைத்திருக்கும் உணவுகளில் தர்ப்பை புல்லினைப் போட்டு வைக்க வேண்டும்.
  • கிரகணத்தின் போது நவக்கிரக துதியைப் பாராயணம் செய்யலாம். அதுபோலவே சந்திர கிரகணத்துக்கான துதியையும் பாராயணம் செய்யலாம்.
  • கிரகண விடுபடும் போது அதாவது கிரகணம் முழுதும் முடிந்ததும் ஸ்நானம் செய்துவிட்டு ஆலய தரிசனம் மேற்கொள்ள வேண்டும்.
  • ஆலய தரிசனம் செய்துவிட்டு தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
  • கிரகணம் முடிந்ததும், பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது நல்லது. ஆலய தரிசனம் மேற்கொண்ட பிறகே உணவு உட்கொள்ள வேண்டும்.
  • சந்திர கிரகண காலத்தில் வீட்டில் இருந்தபடியே இறைவனைத் துதித்து, இறை பாடல்களை பாராயணம் செய்வது நல்ல பலன்களை கொடுக்கும். கிரகணம் முடிந்ததும், ஆலய வழிபாடு செய்வது இன்னும் சிறப்புகளைக் கொடுக்கும்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்