வீட்டிற்குள் இதைச் செய்தால் தெய்வ சக்தி அதிகரிக்கும்

Report Print Kavitha in ஆன்மீகம்
0Shares
0Shares
lankasrimarket.com

நாம் வசிக்கப்போகும் வீட்டில் தெய்வ அம்சம் இருந்தால் சகல செல்வங்களும், வெற்றியும் கிடைக்கும்.

புதிதாக குடிபோகும் வாடகை வீடு அல்லது சொந்த வீட்டிற்கு தெய்வ சக்தியினை கொண்டு வர ஜீவசக்தி கொண்ட ஏதாவது ஒரு உயிரினத்தை கொண்டு செல்ல வேண்டும்.

மனிதர்களை காட்டிலும் பறவைகளிடம் ஜீவசக்தியானது அதிகமாக உள்ளது.

வீட்டு வாசலில் நெற்கதிரை கட்டி தொங்கவிடுவதால் குருவி, புறா போன்ற பறவைகள் அதை உண்ண வந்து செல்லும்.

புறா, குருவி போன்ற பறவைகள் கூடு கட்டினால் அதனைக் கலைக்கக்கூடாது.

தெய்வ சக்தியை கொண்டு வரும் திறன் கொண்டவை இவை என்பதால், இவற்றின் கூட்டை கலைப்பது, வீட்டிற்கு கெட்ட சகுனமாக அமையலாம்.

புறா, குருவி போன்ற பறவைகள் மற்றும் அணில் போன்ற உயிரினங்கள் உங்கள் வீட்டிற்கு வந்தால், அவற்றை விரட்ட கூடாது. இவை நமது வீட்டிற்கு வந்து போனாலே நமக்கு தீமைகள் விலகி நன்மையே நடக்கும்.

புறா கூடு கட்ட வழி செய்வது, அணில் கூடு கட்டினால் கலைக்காமல் இருப்பது, சிட்டுக்குருவி வீடு கட்டுவது போன்றதெல்லாம் சாதகமான சக்திகளை கொண்டு வருவதற்கான ஆத்மாக்களாகும், இவையெல்லாம் வந்துவிட்டுப் போனாலே நமக்கு நல்லது நடக்கும்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்