கிருக்ஷ்ணரின் காளிங்க நர்த்தனம் உணர்த்துவது என்ன?

Report Print Gokulan Gokulan in ஆன்மீகம்
33Shares
33Shares
lankasrimarket.com

இறைவனின் செயல்கள் எல்லாமே மக்களிற்கு அறவழியினை போதிப்பதாகவே இருக்கும்

கிருஷ்ணரின் செய்த லீலைகள் சொல்லில் அடங்காதது. அதுபோல அவரது லீலைகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு காரணம் இருக்கும்.

திருமால கிருஷ்ணராக அவதரித்த்போது காளிங்க நர்த்தனத்தை ஆடினார்.

யமுனை நதியில் வசித்து வந்த காளிங்கனின் விஷ மூச்சுக் காற்றால், யமுனை நதியும், அதன் கரையில் இருந்த சோலைகளும் நஞ்சாகிப் போயின.

இதனால் காளிங்கனை அங்கிருந்து கடலுக்கு செல்ல, கிருஷ்ணர் பணித்தார். அவன் மறுத்ததால் அவனை அடக்கி, அவனது தலையில் நர்த்தனம் புரிந்தார்.

இந்த காளிங்க நர்த்தன தத்துவத்துக்குள் சிறைப்பட்டிருக்கும் ஆழ்ந்த கருத்தை உணர்ந்தவர்கள் வெகு சிலரே,

அதாவது மனித மனம் என்பது தான் பாம்பு. மனிதனின் ஐம்புலன்களும், பாம்பின் ஐந்து தலைகள். இந்த ஐம்புலன்களின் வழியாகத்தான் மனம் என்ற பாம்பு, நஞ்சினை (தீமைகளை) கக்குகிறது.

எனவே ஐம்புலன்களால் படமெடுத்து ஆடும் மனம் என்னும் பாம்பை, நாம் அடக்கி ஒடுக்கி ஆள வேண்டும் என்பது தான் காளிங்க நர்த்தனத்தின் ஊடாக கிருக்ஷ்ணர் உணர்த்திய தத்துவமாகும்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்