இலங்கையில் இனி பெண்களும் வாங்கலாம்.. விற்கலாம்: 38 ஆண்டுகால தடை நீங்கியது

Report Print Santhan in இலங்கை
0Shares
0Shares
lankasri.com

இலங்கையில் பெண்கள் மதுபானங்கள் வாங்குவதற்கும், விற்பதற்கும் விதிக்கப்பட்டு இருந்த தடையை அரசு திரும்ப பெற்றுள்ளது.

இலங்கையில் கடந்த 1979-ஆம் ஆண்டு முதல் பெண்கள் மதுபானங்கள் வாங்குவதற்கும், மதுபானங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை நிலையங்களில் பணியாற்றுவதற்கும் அரசு தடை விதித்திருந்தது.

இருப்பினும் சில இடங்களில் உள்ள மதுக் கூடங்களில் அரசின் உத்தரவை மீறி பெண்கள் பணியமர்த்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், சுமார் 38 ஆண்டுகளாக இருந்து வந்த இந்த தடையை, நாட்டின் அமைச்சர் மங்கல சமரவீரா ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளதாக நிதியமைச்சம் தெரிவித்துள்ளது.

மேலும் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண்களுக்கான சமவுரிமையை நிலைநாட்டவும், சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக மங்கல சமரவீரா தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்