இலங்கை மக்களை அச்சுறுத்தும் பாம்பினங்கள்: எச்சரிக்கை தகவல்

Report Print Deepthi Deepthi in இலங்கை
149Shares
149Shares
lankasrimarket.com

பாம்பு என்றால் படையே நடுங்கும். பாம்பு ஒரு நபரை கடித்துவிட்டால் சாமர்த்தியத்துடன் முதன்மையான மருத்துவ முறைகளை பின்பற்றினால் அந்நபர் உயிர்தப்பித்துவிடலாம்.

பாம்புகளில் பல வகைகள் இருந்தாலும் நாக பாம்பு, கண்ணாடி விரியன், சுருட்டு விரியன், கட்டு விரியன் ஆகிய 4 வகையான விஷ பாம்புகள் மட்டுமே மனிதனின் வாழ்விடங்களை தேடி செல்லகூடியவை.

விஷ தன்மையுள்ள பாம்புகள் கடிக்கும் போது 50 சதவீத விஷம் மட்டுமே உடலில் ஏறும். ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் 1 மில்லியன் மக்கள் பாம்பு கடியினால் இறந்துபோகிறார்கள் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக ஆசிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் விஷப்பாம்புகளின் நடமாட்டம் மிகுதியாக காணப்படுவதால், மனிதர்களின் இறப்பு எண்ணிக்கையும் அதிகம் ஆகும்.

அதிலும் கடலால் சூழப்பட்ட நாடான இலங்கையில் சுமாராக 216 வகைப் பாம்பு இனங்கள் உள்ளன.

இலங்கையில் பாம்புகளின் நடமாட்டம் அதிகம் இருந்தாலும், கீழே கூறப்பட்டுள்ள 3 பாம்புகள் தான் அதிகமாக இலங்கையில் மனிதர்களின் இறப்பிற்கு காரணமாக இருக்கின்றன.

அவை, Cobras, Krait, Viper ஆகும்.

கருநாகம் (Cobras)

இலங்கையின் தலைநகரான கொழும்பில் காணப்படும் பாம்பு வகைகளில் இதுவும் ஒன்றாகும், மிக கொடிய விஷம் கொண்ட இந்த கருநாகம் ஒரு மனிதனை கடித்துவிட்டால் அதன் நஞ்சின் தாக்கத்தில் இறந்து அந்நபர் தப்பிப்பது எளிதல்ல, ஒரே கடியிலேயே மனிதனின் உயிரை சாய்க்கும் தன்மை கொண்டவை.

இதன் கடியால் இறப்பு நேரிடும் வீதம் 75% வரை இருக்கும்.

கட்டுவிரியன் (Krait)

இலங்கையில் இரவு நேரங்களில் மட்டுமே இந்த பாம்பின் நடமாட்டம் அதிகம் இருக்கும், ஏனெனில் இயல்பிலேயே இரவில் தான் இந்த பாம்பு தனக்கு தேவையான இரையை தேடி செல்லும்.

இது 1.75 மீட்டர் நீளம் வரை வளரும். கரையான் புற்று, எலி வலை,கற்குவியலில் இவைகள் வாழ்ந்தாலும் நிலத்தில் வாழும் பாம்புகளுக்கு மட்டுமே வீரியம் அதிகம். இந்த பாம்பின் விஷம் மரணத்தை ஏற்படுத்தக் கூடியது.

கண்ணாடி விரியன் (Viper)

நல்ல பாம்பை விட அதிகம் விஷம் கொண்டவை, இந்த ஆகவே மருத்துவர்கள் இரத்தம் உறையும் நேரம் மற்றும் இரத்தம் வழியும் நேரம் ஆகியவற்றை மணிக்கொரு முறைச் சோதிப்பர்.

கண்ணாடி விரியன் கடித்தால் வலி அதிகமாக இருக்கும், விஷ பாம்பு கடித்தவுடன் பயத்தின் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

கடிப்பட்டவர் பதற்றமடையக் கூடாது. அப்படி ஆனால், ரத்த ஓட்டம் அதிகரித்து விஷம் வேகமாக ஏறும்.

பாம்புகள் கடித்தவுடன் மாந்திரீகம் போன்ற மூடநம்பிக்கைக்கு ஆட்படாமல் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுவது உகந்தது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்