தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு சென்ற அகதிகள் கைது

Report Print Fathima Fathima in இலங்கை
64Shares
64Shares
lankasrimarket.com

தமிழகத்தில் உள்ள அகதி முகாமில் இருந்து சென்ற ஆறு பேர் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போரின் போது இடம்பெயர்ந்து தமிழ்நாட்டுக்கு வந்த அகதிகள் தாய்நாட்டுக்கு செல்ல விரும்புகின்றனர்.

அகதிகள் முகாமில் உள்ள நெருக்கடி மற்றும் விமான பயணத்தில் சிக்கல் இருப்பதால் படகு போன்ற ஆபத்தான பயணங்களை மேற்கொள்கின்றனர்.

இந்நிலையில் நேற்றிரவு இரு சிறுவர்கள், ஒரு பெண் உட்பட ஆறு பேர் இலங்கை சென்ற நிலையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை ஏற்றி வந்த படகோட்டிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை காங்கேசன்துறை பொலிசாரிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ள நிலையில் இன்று யாழ் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜப்படுத்தப்படலாம் என தெரிகிறது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்