இலங்கையின் தேசிய விருதை வென்ற தமிழ் இசையமைப்பாளர்

Report Print Vijay Amburore in இலங்கை
563Shares
563Shares
lankasrimarket.com

"ஓவியா" என்னும் படத்திற்காக, இலங்கை அரசின் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை சிவா பத்மஜனுன் என்பவர் பெற்றுள்ளார்.

இமாலயன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில், காண்டீபன் ரங்கநாதன் தயாரித்து, நடித்துள்ள படம் "ஓவியா". அறிமுக இயக்குனர் கஜன் ஜெகநாதன் இயக்க, சிவா பத்மஜன் இசையமைத்துள்ளார்.

இதில் நாயகியாக இலங்கையை சேர்ந்த மிதுனா என்பவரும், "ஓவியா" என்னும் சிறுமி கதாபாத்திரத்தில் சுவிக்சா ஜெயரத்னம் என்ற குழந்தையும் நடித்துள்ளனர். நிசாந்தன் மற்றும் விபின் சந்திரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்ய, அனீஸ் ரஹ்மான் நடனம் அமைத்துள்ளார்.

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன முன்னிலையில், கடந்த 22-ம் தேதி நடைபெற்ற தேசிய விருதுகள் வழங்கும் விழாவில், சிறந்த பாடலுக்கான பிரிவில், ஓவியா படத்தில் இடம்பெற்றுள்ள "அள்ளிக்கொள்ளவா" பாடல் விருதை தட்டி சென்றது.

அதனடிப்படையில் இசையமைப்பாளர் சிவா பத்மஜனுக்கு, சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதினை கலைத்துறை அமைச்சர் எஸ்.பி.நவய்நெ (S.B.Nawwine) வழங்கியுள்ளார்.

முன்னதாக தனியார் தொலைக்காட்சியின் மூலம் பிரபலமான, பாடகர் ஆனந்த் அரவிந்தக்ஷன் தான் இப்பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்