புரட்டாதிச் சனிக்கிழமை விரத நாளில் கண் திறந்து பார்த்த சனீஸ்வரர் விக்கிரகம்!

Report Print Kalaiyarasi Kalaiyarasi in இலங்கை
புரட்டாதிச் சனிக்கிழமை விரத நாளில் கண் திறந்து பார்த்த சனீஸ்வரர் விக்கிரகம்!
0Shares
0Shares
lankasri.com

வாழைச்சேனை, கறுவாக்கேணி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சனீஸ்வர விக்கிரகத்தின் ஒற்றைக்கண் திறந்த சம்பவம் மக்கள் மத்தியில் ஒருவிதமான பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஒன்பது நவக்கிர சன்னிதானத்திலுள்ள சனீஸ்வரர் விக்கிரகத்தின் கண் திறந்த நிலையில் காணப்படுவதால் மக்கள் இங்கு சென்று பார்வையிட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்றைய தினம் புரட்டாதி சனியன்று இடம்பெற்றுள்ளது.

ஆலய பிரதமகுரு சனிக்கிழமை காலை பூசை செய்யும் போது விக்கிரகத்தில் ஒரு மாற்றம் காணப்படுவதை அறிந்துள்ளதுடன், ஆலயத்திற்கு வந்த பக்தர் ஒருவரும் அதனைக் கண்ணுற்று பார்த்துள்ளார்.

அதன்பிற்பாடு சனீஸ்வரர் வலது கண் திறந்த நிலையில் தென்பட்டதை கண்டு ஆலய நிருவாகத்தினரிடம் தெரிவித்ததுடன்இ இச்சம்பவத்தை கேள்வியுற்ற பக்கதர்கள் பெருந்திரளாக ஆலயத்திற்கு வருகை தந்து பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தினம் புரட்டாதி மூன்றாவது சனி என்பதால் சனீஸ்வரர் விக்கிரகம் கண் திறந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பதற்காக இந்நிகழ்வு இடம்பெற்றிருக்கலாம் எனவும் ஆலயத்தின் பிரதம குரு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் மெதுவாக கண் மூடும் நிலைமை காணப்படுவதாகவும் ஆலய பிரதமகுரு மேலும் தெரிவித்துள்ளார் .

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்