ஆசிரியர்களிற்கு ஏமாற்றம்

Report Print Dias Dias in இலங்கை
ஆசிரியர்களிற்கு ஏமாற்றம்
167Shares
167Shares
lankasrimarket.com

அரச தமிழ் ஊழியர்களுக்கான இம் மாத சம்பளப் பணம் முற்கூட்டியே வழங்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்ட மலையக ஆசிரியர்கள் மற்றும் தமிழ் அரச பணியாளர்கள் ஆகியோர் எதிர்வரும் தீபாவளித் திருநாளை முன்னிட்டு இம் மாதத்திற்கான சம்பளத்தை 16 ஆம் திகதிக்கு முன்னர் வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

வழமையாக ஆசிரியர்களுக்கு 20ஆம் திகதியும், ஏனைய அரச ஊழியர்களுக்கு 25 ஆம் திகதியும் சம்பளம் கணக்கில் இடப்படும்.

இம் மாதம் 18 ஆம் திகதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால், சம்பளத்தை முற்கூட்டி வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

எனவே இது தொடர்பாக மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் சம்பந்தப்பட்ட அமைச்சு மற்றும் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு கேட்டிருந்தோம்.

அதன் போது எமது நாட்டில் அரச ஊழியர்களுக்கு தேசிய பண்டிகையான தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு மாத்திரமே சம்பள பணம் முற்கூட்டியே வழங்கப்படும்.

மத ரீதியான பண்டிகைகளுக்கு இச்சலுகை வழங்கப்படமாட்டாது.

இப்பண்டிகைகளுக்கான முற்பணத்தை அரசாங்கம் முற்கூட்டியே வழங்குகின்றன.

இதில் பெரும்பான்மையான அரச தமிழ் ஊழியர்கள் முற்பணத்தை சித்திரை புத்தாண்டின்போதே பெற்றுக்கொள்கின்றனர்.

எனவே ஆசிரியர்களுக்கும் ஏனைய அரச ஊழியர்களுக்கும் அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட திகதியிலேயே சம்பளம் வழங்கப்படும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்