புத்தாண்டில் இலங்கைக்கு கிடைத்த அதிஷ்டம்!

Report Print Vethu Vethu in அறிக்கை
512Shares
512Shares
lankasrimarket.com

புத்தாண்டு காலத்தில் இலங்கை போக்குவரத்து சபை பாரிய வருமானத்தை ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய ஏப்ரல் மாதம் 6ஆம் திகதியில் இருந்து 13 திகதி வரையான காலப்பகுதியினுள் இலங்கை போதுக்குவரத்து சபை 97 மில்லியன் ரூபாய் வருமானம் பெற்றுள்ளது.

2017ஆம் ஆண்டு குறித்த காலப்பகுதியினுள் இலங்கை போக்குவரத்து சபை ஈட்டிய வருமானம் 85 மில்லியனாகும்.

இதேவேளை, கடந்த 15ஆம் திகதி அதிவேக நெடுஞ்சாலையில் பெற்ற வருமானமே அதிக வருமானமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

அதன் பெறுமதி கிட்டத்தட்ட 3 கோடி ரூபாய்க்கும் அதிகம் என குறிப்பிடப்படுகின்றது.

மேலும் அறிக்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்