இலங்கை அரசாங்கத்தின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Report Print Murali Murali in அறிக்கை
353Shares
353Shares
lankasrimarket.com

இலங்கை அரசாங்கத்திடமுள்ள அனைத்து சொத்துக்களின் பெறுமதி 814 பில்லியன் ரூபா என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

2017ம் ஆண்டு நிதி அறிக்கையை மேற்கோள்காட்டி நிதி மற்றும் ஊடக அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

நிதி முகாமைத்துவ சட்டத்திற்கு அமைய, அனைத்து நிதி ஆண்டு நிறைவுக்கு முன்னர் வரவு செலவுக்கான அறிக்கை ஐந்து மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட வேண்டும்.

இந்நிலையில், கடந்த 31ம் திகதி வரை, குறித்த நிதி ஆண்டிற்கான கணக்காய்வு அறிக்கையினூடாக அதனை பகிரங்கப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும் அறிக்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்