சுவிஸில் இனிய நந்தவனம் சஞ்சிகையின் ஐரோப்பிய சிறப்பிதழ் வெளியீடு

Report Print Gokulan Gokulan in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

சுவிஸ், பேர்ண் நகரில் இனிய நந்தவனம் சஞ்சிகையின் ஐரோப்பிய சிறப்பிதழ் வெளியீடும், மாண்புறு தமிழர் விருது வழங்கலும் நடைபெற்றுள்ளன.

சுவிஸ் அன்னை இல்லம் மகளிர் அமைப்பின் இணைப்பாளர் சுரேஸ் செல்வரெத்தினம் தலைமையில் குறித்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.

advertisement

இதன்போது இனிய நந்தவனம் சிறப்பிதழின் முதலாவது பிரதியை சிவலோஜினி கந்தையாவிடம், இதழாசிரியர் சந்திரசேகரன் வழங்கியுள்ளார்.

அத்துடன் ஆன்மீகவாதிகளான ஸ்ரீ சரஹணபவானந்தக் குருக்கள், சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார், நாடகர் அன்ரன் பொன்ராசா, அரசியல் செயற்பாட்டாளர் தம்பிப்பிள்ளை நமசிவாயம், ஊடகவியலாளர் சண் தவராஜா ஆகியோர் மாண்புறு தமிழர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து நிகழ்வில் இலக்கியவாதி கல்லாறு சதீஸ் தூண் மாநகரசபை உறுப்பினர் தர்ஸிக்கா கிருஸ்ணானந்தம் வடிவேல் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்