சுவிஸர்லாந்து தேர்த் திருவிழாவில் அலையெனத் திரண்ட தமிழர்கள்!

Report Print Dias Dias in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

ஐரோப்பாவில் வெள்ளை மயிலை தன்னகத்தே கொண்டு பிரசித்தி பெற்ற சுவிஸர்லாந்து செங்காலன் சென்.மார்க்கிறத்தன் கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தில் 9ஆம் திருவிழாவான தேர் உற்சவம் நேற்று முன்தினம் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

தேர்த்திருவிழாவன்று காலை 7 மணிக்கு விசேட அபிஷேகம், பூஜை, தம்பபூஜை, வசந்த மண்டப பூஜை ஆகியன இடம்பெற்று கதிர்வேலர் உள்வீதி வலம் வந்து முற்பகல் 11 மணிக்கு தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருள்காட்சி வழங்கியுள்ளார்.

தேர் உற்சவத்தின் போது டென்மார்க்கில் இருந்து வந்த செங்கதிர் குழுவினர் பக்கவாத்திய சகிதம் இசைக்கச்சேரி நடத்தியுள்ளனர்.

இந்த உற்சவத்தில், எமது தாயக உறவுகளுடன், சுவிஸ் உறவுகளும் பங்கேற்று ஒன்றுபட்டு வாழும் சுவிஸ் நாட்டின் இலக்கு வெற்றி கொள்ளபட்டுள்ளதாக அங்கிருந்தவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, புலம் பெயர்ந்து வாழும் மக்கள் சுவிஸ் மக்களுடன், பின்னிப் பிணைந்து வாழ இந்த உற்சவம் வழியமைத்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்