பேரிடர் காலங்களில் மக்களை காப்பாற்றும் நாய்: தட்டிக்கொடுத்த போப்பாண்டவர்

Report Print Deepthi Deepthi in சுவிற்சர்லாந்து
பேரிடர் காலங்களில் மக்களை காப்பாற்றும் நாய்: தட்டிக்கொடுத்த போப்பாண்டவர்
812Shares
812Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்தின் SaintBernard இனத்தை சேர்ந்த Magnum என்ற நாய் போப்பாண்டவரை சந்தித்துள்ளது அந்த நாயை பராமரித்துவரும் அமைப்பிற்கு மட்டுமல்லாது சுவிஸ் நாட்டிற்கும் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

Saint Bernard என்ற நாய் இனம்அதிகமாக சுவிட்சர்லந்தில் வளர்க்கப்பட்டு வருகிறது, இந்த நாயை வளர்க்க வேண்டும் என விரும்பும் பிறநாட்டு மக்கள் கூட, இந்த நாயை சுவிஸ் நாட்டிலேயே வாங்குகின்றனர்.

பேரிடரில் சிக்கி தவிக்கும் மக்கள்,பனிச்சரிவில் மாட்டிக்கொண்ட நபர்களை மீட்பதற்காக Saint Bernard நாய் பயன்படுத்தப்படுகிறது.

சுவிஸில் செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பான Barry, இந்த நாயை பராம்பரியமாக வளர்த்து வருகிறது, இந்நிலையில் ரோம் நாட்டின் VaticanCity - க்கு சென்ற இந்த அமைப்பினர், தங்களுடன் Magnum என்ற இந்த நாயையும் அழைத்து சென்றுள்ளனர்.

போப்பாண்டவரை சந்திப்பது என்பது மிகவும் சுலபமானது கிடையாது என்ற போதிலும், இந்த நாய்க்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது, செயிண்ட் பீட்டர் சதுக்கத்தில் வைத்து இந்த அமைப்பின் அதிகாரிகளை சந்தித்த போப், கூடவே Magnum நாயையும் சந்தித்துள்ளார்.

அந்த நாயை தடவி பார்த்து தட்டிக்கொடுத்துள்ளார், போப்பாண்டவர் தடவிக்கொடுக்கும்போது இந்த நாய் மிகவும் அமைதியா கஇருந்துள்ளது, மேலும் நாயின் பராமரிப்புகள் குறித்து அதிகாரிகளிடம் விசாரித்து அறிந்துள்ளார்.

சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த Saint Bernard என்பவர் பேரிடரில் சிக்கி தவிக்கும்மக்களை காப்பாற்றும் பணியை செய்து வந்தார்.

உருவத்தில் பெரியஅளவில் இருக்கும் இந்த நாயை, பனிச்சரிவு மற்றும்பேரிடரில் சிக்கிதவிக்கும் மக்களை காப்பாற்றும் பணியில் ஈடுபடுத்தியதில் அந்த நபரின்நினைவாக இந்த நாய்க்கு Saint Bernard என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments