சுவிஸில் சிகரெட், மது, கஞ்சா போன்ற போதை பொருட்களுக்கு தடையா?

Report Print Raju Raju in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
Cineulagam.com

நாட்டின் வருமானம் பாதிக்கும் என்பதால் மக்கள் உடல் நலத்தை கெடுக்கும் போதை பொருட்களுக்கு தடை விதிக்க சுவிஸ் அரசு மறுத்துள்ளது.

சுவிற்சர்லாந்து நாட்டில் புகைப்படித்தல், மது அருந்துதல், போதை வஸ்துக்களை உபயோகப்படுத்துதல் போன்ற பழக்கத்தை பலர் மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்தில் Swiss Addiction அமைப்பு நடத்திய ஆய்வில், கடந்த வருடத்தில் ஒருவர் 8.1 லிட்டர் அளவு மது அருந்துவதாக தெரியவந்துள்ளது.

அதே போல சமீபத்தில் 210,000 மக்கள் போதை பொருளான கஞ்சாவை உபயோகப்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதே போல சிகரெட் சம்மந்தமான விளம்பரங்கள் நிறுத்தப்பட வேண்டும் என பெரும்பாலான சுவிஸ் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆனால், கூட்டாட்சி பாராளுமன்றம் இந்த விடயத்தில் மக்கள் மன நிலைக்கு எதிராக உள்ளதாக தெரியவந்துள்ளது.

போதை பொருட்கள் விற்கும் நேரத்தையாவது அரசு குறைக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.

இது பற்றி சுவிஸ் நாடளுமன்ற உறுப்பினர் Gregor Rutz கூறுகையில், போதை தடை சம்மந்தமான விவாதத்தை அரசு சுத்தமாக புறக்கணித்து விட்டது என கூறியுள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments