சாலையில் கார் ஓட்டுனருக்கு திடீர் நெஞ்சுவலி: நிகழ்ந்த விபரீத சம்பவம்

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasri.com

சுவிட்சர்லாந்து நாட்டில் சாலையில் பயணித்த கார் ஒன்று ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுனர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸின் ஆர்கவ் மாகாணத்தில் உள்ள Rothrist நகரில் 70 வயதான முதியவர் ஒருவர் வசித்து வந்துள்ளார்.

நேற்று மாலை 5.30 மணியளவில் தனது காரை எடுத்துக்கொண்டு அவர் வெளியே புறப்பட்டுள்ளார்.

சில நிமிடங்கள் பயணத்திற்கு பிறகு கார் பாலம் ஒன்றின் மீது பயணம் செய்தபோது திடீரென தடுப்பு சுவற்றை உடைத்துக்கொண்டு ஆற்றில் விழுந்துள்ளது.

இவ்விபத்து குறித்து தகவல் அறிந்த பொலிசார் மருத்துவர்களுடன் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

மிகுந்த போராட்டத்திற்கு பிறகு ஆற்றில் இருந்து காரை இழுத்து கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.

காருக்குள் சோதனை செய்தபோது அதில் பயணித்த ஓட்டுனர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் இருந்துள்ளதை கண்டு பொலிசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சடலத்தை கீழே இறக்கி பரிசோதனை செய்தபோது ஓட்டுனர் விபத்து நிகழ்வதற்கு முன்னதாகவே உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளது.

குறிப்பாக, கார் ஓட்டியபோது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட காரணத்தினால் அவர் காரிலேயே உயிரிழந்திருக்க வேண்டும்.

பின்னர், கட்டுப்பாட்டை இழந்த கார் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளாகியிருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ள பொலிசார் இவ்விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments