கருவுற்ற பாலியல் தொழிலாளி! கொடூர முறையில் கருச்சிதைவு செய்த தரகர்: நெகிழ வைக்கும் கதை

Report Print Basu in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasri.com

சுவிட்சர்லாந்தில் விபச்சார தரகர் ஒருவன் கர்ப்பிணியின் வயிற்றின் மேல் நடந்து கருவை சிதைய வைத்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது.

சூரிச் நகரிலே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது. 45 வயதான ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவன் இரண்டு பெண்களை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி தரகராக இருந்துள்ளான்.

இந்நிலையில், இரு பெண்களில் ஒருவர் தரகரினால் கர்ப்பமாகியுள்ளார். இதை அறிந்த அவன், மனிதாபிமானமின்றி பெண்ணின் வயிற்றின் மேல் நடந்து கருவை சிதைய வைத்துள்ளான்.

சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த சூரிச் நீதிமன்றம், குற்றவாளிக்கு 3 ஆண்டு எட்டு மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களில் ஒருவருக்கு 16000 பிராங்க்(இலங்கை மதிப்பில் 10 லட்சம்) மற்றொரு பெண்ணுக்கு 8000 பிராங்க்(இலங்கை மதிப்பில் 5 லட்சம்) அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, குறித்த நபர் கடத்தல் வழக்கு குற்றச்சாட்டப்பட்டு விடுவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments