மகனின் காதலியை கற்பழித்த தந்தை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்து நாட்டில் மகனின் காதலியை கற்பழித்த தந்தைக்கு அந்நாட்டு நீதிமன்றம் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

சுவிஸில் உள்ள சூரிச் நகரில் பெயர் வெளியிடப்படாத பெற்றோர் மற்றும் அவர்களுடைய மகன் வசித்து வருகின்றனர்.

மகனுக்கு காதலி ஒருவர் இருந்ததால் இருவரும் அதே வீட்டில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 2008-ம் ஆண்டு மகன் வீட்டில் இல்லாதபோது அவருடைய காதலியை தந்தை கொடூரமாக கற்பழித்துள்ளார்.

ஆனால், இச்சம்பவத்தை அவர் வெளியே யாரிடமும் கூறவில்லை. இதனை சாதகமாக எடுத்துக்கொண்ட தந்தை தன்னுடைய இரு நண்பர்களை அழைத்து சென்று அப்பெண்ணை மீண்டும் கூட்டாக கற்பழித்துள்ளார்.

இச்சம்பவத்திற்கு பின்னர் மகனும் அவருடைய காதலியும் பிரிந்துள்ளனர். பெண்ணிற்கு புதிதாக காதலன் ஒருவர் கிடைத்துள்ளார்.

இதனை தொடர்ந்து, கடந்த 2016-ம் ஆண்டு யூன் மாதம் தனக்கு நிகழ்ந்த இரண்டு சம்பவங்களை பற்றி தனது புதிய காதலனிடம் தெரிவித்துள்ளார்.

காதலி கூறுவதை கேட்டு அதிர்ச்சி அடைந்த காதலன் முன்னாள் காதலனின் தந்தை மீது வழக்கு பதிவு செய்தார்.

நீதிமன்றத்தில் பல்வேறு கட்டங்களாக விசாரணை நடைபெற்று வந்து நிலையில், தந்தை குற்றவாளி என நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டது.

இவ்வழக்கு தொடர்பான இறுதி விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்தபோது தந்தைக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனையும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 20,000 பிராங்க் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments