சுற்றுலா சென்ற இடத்தில் பரிதாபமாக உயிரிழந்த சுவிஸ் குடிமகன்கள்

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த இரண்டு நபர்கள் சுற்றுலா சென்றபோது உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸ் நாட்டை சேர்ந்த 46 மற்றும் 61 ஆகிய வயதுடைய இருவர் ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

மலையேற்றம் தொடர்பான பொழுதுபோக்கில் ஈடுபாடு கொண்ட இருவர் Picos de Europa என்ற மலைப்பகுதிக்கு சென்றுள்ளனர்.

ஆனால், மலைக்கு சென்றவர்கள் ஒரு வாரமாக திரும்பி வரவில்லை. இருவரும் தங்கியிருந்த ஹொட்டல் நிர்வாகம் பொலிசாரிடம் புகாரும் அளித்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன் தினம் மலைப்பகுதிக்கு சென்ற சிலர் இருவரின் சடலங்களை கண்டுபிடித்து பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

சடலங்கள் நீண்ட நாட்களாக கிடந்ததால் அங்கு பரவிய துர்நாற்றம் மூலம் அவற்றை கண்டுபிடித்துள்ளனர்.

மேலும், இடத்தை ஆராய்ந்தபோது சுமார் 130 மீற்றர் உயரத்திலிருந்து இருவரும் தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் சுவிஸ் நாட்டை சேர்ந்தவர்கள் என்பதை பொலிசார் உறுதி செய்துள்ளனர். எனினும், கூடுதலான தகவல்கள் எவற்றையும் வெளியிடவில்லை.

சுற்றுலா சென்றபோது சுவிஸ் குடிமகன்கள் உயிரிழந்தது தொடர்பாக பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments