உலகின் மிகப்பெரிய பிரச்சனைக்கு தீர்வை கூறிய சுவிற்சர்லாந்து: அசத்திய மக்கள்

Report Print Raju Raju in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

உலக வெப்பமயமாதலுக்கு எதிராக போராட வேண்டும் என்ற நோக்கத்தில் சுவிற்சர்லாந்தில் உலகின் மிகப்பெரிய மின்சார வாகன பேரணி தொடங்கியுள்ளது.

உலகெங்கிலும் அதிகரித்து வரும் வாகனங்களாலும், அதிலிருந்து வெளியேறும் புகையாலும் உலக வெப்பமயமாதல் (global warming) பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த விடயத்துக்கு எதிராக போராடும் நோக்கில் சுவிற்சர்லாந்தின் Zurich நகரில் புகையில்லாத மின்சார வாகன அணிவகுப்பு தொடங்கியுள்ளது.

இந்த அணிவகுப்பு மொத்தம் எட்டு நாட்கள் நடைபெறவுள்ளது. உலகில் உள்ள பத்து நாடுகளை சேர்ந்த நபர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

எட்டு நாட்களில் சுவிஸில் பல்வேறு இடங்களுக்கு இந்த குழுவினர் பயணம் செய்யவுள்ளார்கள்.

இதில் மின்சாரத்தால் இயங்கக்கூடிய கார்கள், பைக்குகள், லொறிகள் போன்றவைகள் பயன்படுத்தப்படுகின்றன.

சூரிய மின்சக்தியால் ஆன வாகனங்களை எல்லோரும் உபயோகப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வரும் Palmer என்ற நபர் கூறுகையில், புகையில்லாத மின்சார வாகனங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது முக்கியமாகும்.

இதுபோன்ற வாகனங்கள் நம்பகமானவை மற்றும் நன்றாக உழைக்கக்கூடியவை என நாம் மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும் என கூறியுள்ளார்.

இந்த அணிவகுப்பில் 1960ல் உபயோகிக்கப்பட்ட மொடல் வாகனங்கள் கூட பயன்படுத்தப்படுகிறது.

அணிவகுப்பில் கலந்து கொண்டுள்ள மின்சார வாகனங்கள் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 250 கி.மீட்டர் அளவுக்காவது பயணிக்க வேண்டும் என திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் கலந்து கொள்பவர்கள் அனைவரும் சுவிஸில் உள்ள பல பகுதிகளுக்கு, முக்கியமாக பள்ளிக்கூடங்களுக்கு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தவுள்ளார்கள்.

அணிவகுப்பில் கலந்து கொண்டுள்ள Fabian Wyssmann கூறுகையில், மின்சார வாகனம் மூலமும் சுவிஸை சுற்றலாம் என நிரூபிக்க வேண்டியது முக்கியமாகும்.

ஒரு சாதாரண குப்பை லொறி 100 கி.மீட்டர் பயணிக்க 100 லிட்டர் எரிவாயு தேவைப்படுகிறது என கூறிய Fabian இது ஒரு மோசமான வணிகம் என கூறியுள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments