முன்னாள் காதலனை பழிவாங்க பெண் செய்த அதிர்ச்சி காரியம்

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்து நாட்டில் முன்னாள் காதலனை பழிவாங்க பெண் ஒருவர் உலகம் முழுவதும் ஷொப்பிங் செய்துவிட்டு அதற்கான கட்டண ரசீதுகளை காதலனுக்கு அனுப்பி வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸில் உள்ள சூரிச் நகரில் 32 வயதான பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கும் நபர் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டு பழகி வந்துள்ளனர்.

சமீபத்தில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துள்ளனர். ஆனால், முன்னாள் காதலனை பழிவாங்க வேண்டும் என பெண் திட்டம் தீட்டியுள்ளார்.

சில தில்லுமுல்லுகளை செய்து இணையத்தளம் மூலமாக உலகம் முழுவதும் உள்ள 60 கடைகளில் ஷொப்பிங் செய்துள்ளார்.

இப்பொருட்களுக்கான கட்டணத்தை செலுத்த முன்னாள் காதலனின் முகவரியை கொடுத்துள்ளார். பொருட்கள் அனைத்தும் பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளது.

சுமார் 17,000 பிராங்க் கட்டண ரசீதுகள் முன்னாள் காதலனின் வீட்டிற்கு சென்றுள்ளது. ரசீதுகளை கண்டு அதிர்ச்சி அடைந்த நபர் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.

விசாரணையை தொடங்கியபோது இணையத்தள தகவல்களை பயன்படுத்தி பெண்ணை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர். மேலும், அவரிடம் இருந்த பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், முன்னாள் காதலனின் பெயரில் இணையத்தள குற்றத்தில் ஈடுப்பட்ட காரணத்திற்காக பெண் மீது வழக்கு பதிவு செய்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments