கடந்த 2015ல் சுவிஸின் போர் விமானம் விபத்தில் சிக்கியதற்கு அவசர நடவடிக்கைகளை விமானி சரியாக பின்பற்றாமல் இருந்தது தான் காரணம் என தற்போது தெரியவந்துள்ளது.
சுவிற்சர்லாந்து ஆயுதப்படைக்கு சொந்தமான F/A-18 ரக போர் விமானம் மூலம் கடந்த 2015 அக்டோபர் 14ஆம் திகதி ராணுவ பயிற்சிகள் நடைபெற்று வந்தன.
அப்போது அந்த விமானத்தை 38 வயதான விமானி ஒருவர் தனியாக இயக்கி கொண்டிருந்த போது விமானம் ஒரு கிராம பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
விபத்து நடக்க போவதை அறிந்த விமானி விமானத்திலிருந்து முன்னரே கீழே குதித்துள்ளார்.
அதில் ஏற்பட்ட காயத்துக்காக பின்னர் மருத்துவமனையில் விமானி சிகிச்சை பெற்றார்.
இந்நிலையில் விபத்துக்கான காரணம் குறித்தும் அந்த சமயத்தில் விமானி செய்த தவறுகள் குறித்தும் சுவிஸ் அரசு தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், விமானத்தின் இடது பக்க இன்ஜீன் திடீரென முடங்கியதாக கூறப்பட்டுள்ளது.
பின்னர் இடதுபக்கமாக சாய்ந்த விமானம் உயரமாக பறக்கும் கட்டுப்பாட்டை இழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விமானம் இழப்புக்குள்ளானதற்கு அவசர நடவடிக்கையை மேற்கொள்ளாமல் விமானி வெளியேறியது தான் காரணமாகும்.
அதனுடன் தொழிநுட்ப கோளாறு, விமானியின் உடல் நல பிரச்சனை மற்றும் மூன்றாம் நபரின் தலையீடு போன்ற விடயங்களும் அதில் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான விசாரணையை அடுத்து விமானி ராணுவ விதிகளை மீறியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மேலும் விமானி சட்டத்தின் விதிமுறைகளை மீறினாரா என்பது குறித்த விசாரணை தற்போது தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.