நடுவானில் விமானியை தாக்கிய பயணி: கடுமையான தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த பயணி ஒருவர் விமானியை தாக்கிய குற்றத்திற்காக அவருக்கு நீதிமன்றம் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

சுவிஸின் ஜெனிவா நகரை சேர்ந்த 38 வயதான நபர் ஒருவர் தனது காதலியுடன் கடந்த 2007-ம் ஆண்டு சுவிஸ் விமானத்தில் பயணம் செய்துள்ளார்.

விமானத்தில் ஏறுவதற்கு முன்னதாகவே அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியுள்ளார். விமானம் புறப்பட்டதும் காதலிக்கும் அவருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

ஆத்திரம் அடைந்த நபர் காதலியை தாக்கியதுடன் தடுக்க வந்த சக பயணிகளையும் தாக்கியுள்ளார்.

சம்பவம் அறிந்த விமானி ஒருவர் விரைந்து நபரை தடுத்துள்ளார். ஆனால், சற்றும் சிந்திக்காத நபர் விமானியையும் தாக்கியுள்ளார்.

சூழ்நிலையை உணர்ந்த விமானி பயணத்தை ரத்து செய்து கிரேக்க தலைநகரான ஏதென்ஸில் தரையிறங்கியுள்ளார்.

சுவிஸ் நபர் மீது ஏதென்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. விமானத்தில் தகராறு செய்த நபர் அப்போதே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இத்தனை ஆண்டுகள் சிறையில் தண்டனை அனுபவித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் அந்நபர் மீதான வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

விமானி மற்றும் சக பயணிகளை தாக்கிய குற்றத்திற்காக பயணிக்கு கூடுதலாக 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கிரேக்க நாட்டு சட்டப்படி, பறக்கும் விமானத்தில் சக பயணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நபருக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

நீதிமன்றத்தின் இத்தீர்ப்பினை எதிர்த்து நபர் மேல் முறையீடு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments