திருடுவதற்கு புத்திசாலித்தனம் வேண்டாமா?: பொலிசாரிடம் எளிதில் சிக்கிய திருடன்

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
Cineulagam.com

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஹொட்டல் ஒன்றில் நுழைந்து திருடிய நபரை பொலிசார் விரைவாகவும் எளிதாகவும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ஆர்கவ் மாகாணத்தில் உள்ள Oftringen நகரில் டுனிசியா நாட்டை சேர்ந்த 28 வயதான நபர் வசித்து வருகிறார்.

விளையாட்டு பிரியரான இவர் எந்த நேரத்திலும் விளையாட்டு வீரர்கள் அணியும் உடையை அணிந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று பிற்பகல் நேரத்தில் நகரில் உள்ள முக்கிய ஹொட்டல் ஒன்றில் நுழைந்துள்ளார்.

ஊழியர்களை மிரட்டிய நபர் அங்கு வைக்கப்பட்டிருந்த பணம் அனைத்தையும் சுருட்டிக்கொண்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.

திருட்டு சம்பவம் குறித்து பொலிசாருக்கு உடனடியாக புகார் கொடுக்கப்பட்டது. ஆதாரங்களை சேகரித்த பொலிசார் சில நிமிடங்களில் ஹொட்டலுக்கு மிக அருகிலேயே திருடன் கைது செய்யப்பட்டுள்ளான்.

இது குறித்து பொலிசார் வெளியிட்டுள்ள தகவலில், ‘ஹொட்டலுக்கு திருட சென்றபோது அர்ஜெண்டா நாட்டை சேர்ந்த பிரபல கால்பந்து வீரரான லயோனல் மெர்ஸியின் உடையை திருடன் அணிந்துள்ளான்.

திருடனின் உடை மிகவும் பிரபலமானது என்பதால் சில நிமிடங்களேயே கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

திருடனை விரைவில் பிடித்து பணத்தை திருப்பிக்கொடுத்த பொலிசாருக்கு ஹொட்டல் உரிமையாளர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments