இளம்பெண்ணை 6-வது மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்த நபர் கைது

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasri.com
advertisement

சுவிட்சர்லாந்து நாட்டில் இளம்பெண் ஒருவரை 6-வது மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்ததாக கூறப்படும் நபரை அந்நாட்டு பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவிஸின் டிசினோ மாகாணத்தில் உள்ள Bellinzona என்ற நகரில் 35 வயதான ஆண் மற்றும் 24 பெண் வசித்து வந்துள்ளனர்.

advertisement

இவர்கள் இருவரும் கணவன் மனைவியா என இதுவரை உறுதி செய்யப்படாத நிலையில், இரண்டு பிள்ளைகளுடன் இவர்கள் 6-வது மாடியில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர்.

நேற்று இரவு நேரத்தில் திடீரென பெண் அலறும் சத்தம் கேட்டு அருகில் குடியிருந்தவர்கள் வெளியே வந்துள்ளனர்.

அப்போது, 24 வயதான பெண் தரையில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக தகவல் பெற்ற பொலிசார் உடனடியாக சென்று சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பொலிசார் பொதுமக்களிடம் விசாரணை செய்தபோது, இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இருவரும் எரித்திரியா என்ற நாட்டில் இருந்து புகலிடம் கோரி சுவிஸிற்கு வந்துள்ளனர்.

எந்த நேரத்திலும் இருவர் சண்டை, வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு வருவது வழக்கம்.

தன்னை விட்டு பிரிய நினைக்கும் பெண்ணை அவர் கொலை செய்யவும் ஏற்கனவே முயன்றுள்ளார் என பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்களின் புகார்களை பெற்ற பொலிசார் 35 வயதான நபரை கைது செய்து அவர் மீதான கொலை வழக்கை விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments