பறவை இறகுகளை திருடிய நபருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்து நாட்டில் பறவை இறகுகளை திருடிய நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

சுவிஸில் உள்ள பேசல் நகரை சேர்ந்த 45 வயதான நபருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.

கடந்த 2005 முதல் 2012 வரை 7 ஆண்டுகளாக சுவிட்சர்லாந்து, ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களுக்கு சென்று பறவை இறகுகளை திருடி வந்துள்ளார்.

2012-ம் ஆண்டு ஜேர்மனியில் உள்ள முனிச் நகரில் திருடியபோது நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சுவிஸில் உள்ள பேசல் நகரில் அவரது வீட்டில் பொலிசார் பரிசோதனை செய்துள்ளனர்.

அப்போது, வீட்டிற்குள் பதுக்கப்பட்டிருந்த சுமார் 10,000 இறகுகளை பொலிசார் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட இறகுகளின் மொத்த மதிப்பீடு 6 மில்லியன் பிராங்க் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் மீது வழக்கு விசாரணை மேற்கொண்ட நிலையில் நேற்று பேசல் நீதிமன்றத்தில் இறுதி விசாரணை நடந்துள்ளது.

அப்போது, நபர் மீதான குற்றம் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments