கோலாகலமாக தொடங்கிய நீச்சல் போட்டி: சடலமாக மிதந்த வீரர்

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் பங்கேற்ற வீரர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸில் உள்ள சூரிச் மாகாணத்தில் ஒவ்வொரு வருடமும் நீச்சல் போட்டி நடத்துவது வழக்கம்.

நேற்று 29-வது ஆண்டு நீச்சல் போட்டி கோலாகலமாக துவங்கிய நிலையில், 1.5 கி.மீ நீளமுள்ள சூரிச் ஏரியை கடக்க வீரர்கள் தயார் நிலையில் இருந்துள்ளனர்.

மாலை நேரத்தில் தொடங்கிய இப்போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து 10,705 நீச்சல் வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

விளையாட்டு போட்டியில் நிறைவுப்பெற்று பெண் ஒருவர் முதலிடத்தில் வெற்றிப்பெற்றுள்ளார்.

ஆனால், சில நிமிடங்களுக்கு பின்னர் ஏரியில் ஆண் உடல் ஒன்று மிதந்து வருவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார் உடலை கரைக்கு இழுத்து வந்து முதலுதவி அளித்துள்ளனர்.

ஆனால், உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

நீச்சல் போட்டியில் பங்கேற்றபோது உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபர் சூரிச் மாகாணத்தை சேர்ந்தவர் எனவும் அவருக்கு 66 வயது இருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

நீச்சல் விளையாட்டு போட்டியில் வீரர் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments