சுவிசிலிருந்து நாடு கடத்தப்பட்ட பெண்

Report Print Raju Raju in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்திலிருந்து பிரான்சை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த மார்ச் மாதம் நாடு கடத்தப்பட்டதாக பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து பொலிஸ் துறை சார்பில் பேட்டியளித்துள்ள Cathy Maret கூறுகையில், பிரான்ஸை சேர்ந்த பெண் ஒருவர் சுவிஸ் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடியவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் Vaudல் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து குறித்த பெண் நாடுகடத்தப்பட்டார், சுவிசில் நுழையவும் தடை விதிக்கப்பட்டது, இது தீவிரவாத எச்சரிக்கை நடவடிக்கை என தெரிவித்துள்ளார்.

நாடுகடத்தப்பட்ட பெண் குறித்த, மற்ற விவரங்களை பொலிசார் வெளியிடவில்லை.

ஐரோப்பாவின் பல பகுதிகளில் நடந்தது போன்ற தீவிரவாத தாக்குதல்கள் சுவிஸில் இதுவரை நடந்ததில்லை.

ஆனாலும், அதிக மக்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடும் விழாக்கள், நிகழ்ச்சிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்போதும் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments