சுவிஸில் வரலாறு காணாத புயல் மழை

Report Print Raju Raju in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

சுவிற்சர்லாந்தில் கடந்த இரு தினங்களாக இடியுடன் பெய்த கனத்த மழையால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சுவிற்சர்லாந்தில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் கடுமையான மழை பெய்தது. இந்த மழையினால் அந்நாட்டின் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

முக்கியமாக Bern மற்றும் Aargau மண்டலங்களில் பாதிப்பு அதிகமாக இருந்து. நாட்டின் பல பகுதிகளில் 34 டிகிரி வானிலை இருந்தது.

இடியுடன் பெய்த கடும் மழை காரணமாக Aargauல் உள்ள Zofingen நகரில் வெள்ளம் ஏற்பட்டதுடன், பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இது போன்ற கடுமையான நிலையை கடந்த 45 வருடங்களில் நாங்கள் பார்த்ததில்லை என தீயணைப்பு துறை அதிகாரி Peter Ruch கூறியுள்ளார்.

Biel நகரில் ஆலங்கட்டி மழை பெய்தது.

மழையில் ஏற்பட்ட பாதிப்பால் இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இருவர் தங்கள் வீடுகளிலிருந்து பாதுகாப்பு காரணமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் கூறியுள்ளன.

வெள்ளத்தில் சிக்கி தவித்த மக்களுக்கு உதவ 450க்கும் அதிகமான மீட்புகுழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டார்கள்.

Zofingen ரயில் நிலையத்தின் இரண்டு ரயில் பாதைகளில் சனிக்கிழமை இரவு தண்ணீர் சூழ்ந்தது.

ரயில் நிலையத்தின் வாகன நிறுத்துமிடத்தில் இருந்த 100 கார்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.

Zofingen நகரின் முக்கிய நெடுஞ்சாலையில் வெள்ளம் புகுந்ததால் சாலை, சில மணி நேரத்துக்கு மூடப்பட்டது.

கடும் மழையால் சரியாக எவ்வளவு சேதம் என இன்னும் தெரியாத நிலையில், பெண் கவுன்சிலர் ஒருவர், அந்நாட்டு நாணயமான francs கணக்குபடி 100 மில்லியன் francs அளவு சேதம் ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments