சுவிஸ் நாட்டுக்கு சென்ற பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான்

Report Print Raju Raju in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

சுவிற்சர்லாந்து சென்ற பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நடத்துவது தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்துள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் சுவிற்சர்லாந்தின் அதிகம் பிரெஞ்ச் மொழி பேசும் மக்கள் வசிக்கும் Lausanne நகருக்கு சென்றார்.

இவருடன் மேக்ரானின் மனைவி Brigitte மற்றும் பாரீஸ் மேயர் Anne Hidalgo ஆகியோரும் உடன்சென்றனர்.

2024ல் பாரீஸ் தான் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் என கூறப்பட்டு வரும் நிலையில் மேக்ரான் அங்கு சென்றுள்ளார்.

2024 மற்றும் 2028ல் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகள் குறித்து மேக்ரான் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் Thomas Bachயுடன் பேசினார்.

ஒலிம்பிக் மியூசியத்துக்கு மேக்ரான் சென்றபோது இரு பக்கத்திலும் நின்றிருந்த மக்களை நோக்கி கை அசைத்தபடி சென்றார்.

நாட்டின் முழு ஒற்றுமையுடன் பாரீஸ் அணியின் பிரதிநிதியாக சுவிசுக்கு வந்துள்ளதாக மேக்ரான் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பரபரப்பு மற்றும் பதற்றங்கள் நிறைந்த உலகில் அமைதி மற்றும் சகிப்புதன்மை நமக்கு தேவை என கூறிய மேக்ரான், ஒலிம்பிக் இயக்கம் அதை நமக்கு வலுவாக உணர்த்துவதாக கூறியுள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments