சுவிஸ் சிறையில் இத்தாலி இளைஞன் மர்ம மரணம்: பொலிஸ் திணறல்

Report Print Basu in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

சுவிஸ் சிறையில் இத்தாலி கைதி ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூரிச் மாகாண சிறையிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது.

போதைப்பொருள் சட்டம் மற்றும் சாலை போக்குவரத்து சட்டத்தை மீறியதற்காக காவலில் வைக்கப்பட்டிருந்து 19 வயதான இத்தாலி இளைஞனே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

காலை உணவிற்காக சிறைக்கூடத்திற்கு சென்று பார்த்த போது, அவர் படுக்கையில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக பொலிசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை எந்த தடயமும் கிடைக்காததால் பொலிசார் கொலையா, தற்கொலையா என கண்டறிய திணறி வருகின்றனர்.

மேலும் மருத்துவர்களால் தான் இறப்பிற்கான காரணத்தை கூற முடியும் என பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments