பிள்ளைகளின் செலவிற்காக பெற்றோர்கள் வழங்கும் பணம் எவ்வளவு?: வெளியான ஆய்வு முடிவுகள்

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்து நாட்டில் பிள்ளைகளின் செலவிற்காக ஒவ்வொரு பெற்றோரும் எவ்வளவு பணம் வழங்கி வருகிறார்கள் என்பது தொடர்பான ஆய்வு தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிள்ளைகள் குறிப்பிட்ட வயதை அடைந்தவுடன் அவர்களின் செலவிற்காக(Pocket Money) பெற்றோர்கள் பணம் வழங்குவது பல நாடுகளில் பின்பற்றப்பட்டு வருகிறது.

சுவிஸில் பிள்ளைகள் 6 வயதை அடைந்த உடனே அவர்களுக்கு குறிப்பிட்ட தொகை ஒன்றை பெற்றோர் வழங்கி வருகின்றனர்.

அதாவது, ஒவ்வொரு மாதமும் 6 வயது அடைந்த பிள்ளைக்கு 5 பிராங்கை பெற்றோர் கொடுகின்றனர்.

பின்னர், பிள்ளைக்கு 14 வயது அடையும்போது இத்தொகையானது 48 பிராங்காக அதிகரிக்கிறது.

6 வயதை அடைந்த பிள்ளைகள் பெற்றோரிடம் பணம் பெறுவது 38 சதவிகிதமாகவும், 14 வயது அடைந்த பிள்ளைகள் பெற்றோரிடம் பணம் பெறுவது 85 சதவிகிதமாகவும் உள்ளது.

அதே போல், 6 வயதில் பணம் பெறும் ஆண் பிள்ளைகள் 43 சதவிகிதமாகவும், இதே வயதில் பணம் பெறும் பெண் பிள்ளைகள் 28 சதவிகிதமாகவும் உள்ளனர்.

இந்நிலை அதிகரித்து, 14 வயதில் பணம் பெறும் ஆண் பிள்ளைகள் 85 சதவிகிதமாகவும், பெண் பிள்ளைகள் 84 சதவிகிதமாகவும் உள்ளனர்.

இந்த ஆய்வில் வளரும் பிள்ளைகள் பொருளாதார ரீதியாக பின் தங்கி இருக்க கூடாது என 91 சதவிகித பெற்றோர்கள் விரும்புகின்றனர்.

பணம் கொடுப்பது மட்டுமில்லாமல், அதனை எப்படி செலவழிக்க வேண்டும் என்பதையும் பெற்றோர் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்கின்றனர்.

உதாரணத்திற்கு, பணம் மரத்தில் காய்ப்பது இல்லை. இதனை அளவாக செலவளிக்க வேண்டும் என 77 சதவிகித பெற்றோர் அறிவுரை கூறுகின்றனர்.

இதே வரிசையில், தங்களது அவசய தேவைகளுக்கு மட்டுமே பணத்தை செலவழிக்க வேண்டும் என 64 சதவிகித பெற்றோர் பிள்ளைகளுக்கு கற்பிக்கின்றனர்.

எஞ்சிய 63 சதவிகித பெற்றோர் பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை எனப் பிள்ளைகளுக்கு அறிவுரை கூறுவதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments