பண்ணையில் நிகழ்ந்த தீ விபத்து: பரிதாபமாக பலியான 15 குதிரைகள்

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள பண்ணை ஒன்றில் நிகழ்ந்த தீ விபத்தில் உள்ளே அடைக்கப்பட்டிருந்த 15 குதிரைகள் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸின் வாட் மாகாணத்தில் உள்ள Avenches என்ற பகுதியில் தான் இந்த தீ விபத்து நிகழ்ந்துள்ளது.,

சுவிஸ் நேரப்படி இன்று அதிகாலை 2.30 மணியளவில் பண்ணையில் தீ விபத்து நிகழ்ந்துள்ளதாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவலை பெற்ற தீயணைப்பு வீரர்கள் வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். பண்ணையில் தீ மளமளவென பரவி எரிந்தபோது அருகில் இருந்த அடுக்குமாடி குடியிருப்பிற்கும் தீ பரவியுள்ளது.

எனினும், சரியான நேரத்தில் செயல்பட்ட வீரர்கள் குடியிருப்பில் இருந்த நபர்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றியுள்ளனர்.

பண்ணையில் தீயை கட்டுப்படுத்த வீரர்கள் போராடியுள்ளனர். ஆனால், சில மணி நேரத்திற்கு பின்னரே தீயை அணைக்க முடிந்துள்ளது. இவ்விபத்தில் பண்ணையில் அடைக்கப்பட்டிருந்த 15 குதிரைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன.

விபத்தில் உயிர் பிழைத்த குதிரைகள் மற்றொரு பண்ணைக்கு உடனடியாக மாற்றப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது.

இச்சம்பவம் நிகழ்ந்து ஒரு மணி நேரத்திற்கு பின்னர் பண்ணைக்கு அருகில் மற்றொரு இடத்திலும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆனால், உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

குறிப்பிட்ட நேரத்தில் அடுத்தடுத்து தீ விபத்து நிகழ்ந்ததால் இதற்கு பின்னால் மர்ம நபர் இருக்க வாய்ப்புள்ளதால் அதனடிப்படையில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments